எடுத்த வைக்க மாட்டீங்க.. வடு மாங்காய்!

vadu mango
vadu mango

வடுமாங்காய்

தேவையானவை:

பச்சை பசேல் என்று காம்புடன் கூடிய சிறு நெல்லிக்காய் சைஸ் – வடுமாங்காய்கள் (வாயில் போட்டால் கடுக்கென்று இருப்பவை) – சிறு படி கணக்கில் 10 படி, உப்பு – அரை படி (தலை வடித்தது), காய்ந்த மிளகாய் 100 கிராம், கடுகு – 100 கிராம், மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன், விளக்கெண் ணெய், நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
மாவடுக்களை காம்பு ஒடித்து, குழாய் தண்ணீரில் நன்றாக கழுவி வடிதட்டியில் கொட்டி, நீர் வடிந்ததும் சுத்தமான டவல்களில் போட்டு இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி, பின் துடைத்துக் கொள்ளவும். ஒரு அகல பேஸின் (அ) தாம்பளத்தில் வடுக்களைப் போட்டு விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் விட்டு பிசிறிக் கொள்ளவும். வடுமாங்காயின் அளவில் பத்துக்கு அரை பங்கு அளவு உப்பு எடுத்து வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பின்பு ஜாடியில் சிறிது உப்பு, 2 கைப்பிடி மாங்காய், சிறிது மஞ்சள்தூள் என்று மாற்றி மாற்றி சேர்த்து, மூடியால் மூடி, வாய்கட்டு போட்டு (வெள்ளைத் துணியால் வெளிப்புறம் கட்டி வைப்பது), ஒரு நாள் வைத்து மறுநாள் ஜாடியை குலுக்கிக் கொள்ளவும். இப்படி ஒரு வாரம் வைத்து எடுத்தால் மாங்காய்கள் நன்றாக சுருங்கி நீர் விட்டிருக்கும். அதன் பிறகு காம்பு நீக்கிய மிளகாய், கடுகை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் ரவை போல் பொடிக்கவும். இதை மாவடுவில் கொட்டி சுத்தமான கரண்டியால் கிளறி மூடி போட்டு, வாய்கட்டு போட்டு, தினமும் குலுக்கவும். மேற்கொண்டு பத்து நாட்களில் நல்ல வாசனை வரும். பிறகு எடுத்துப் பரிமாறலாம் (மாவடுக்களில் நீர் குறைவாக இருந்தால் 2 கப் கொதி நீரை ஆற்றி சேர்க்கலாம்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

Entertainment News

Popular Categories