மதத்தை கைவிட்வரின் தலையை வெட்டிக் கொல்ல உத்தரவிட்ட நீதிமன்றம்

Published:

 
 
சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று ஒருவருக்கு இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி அவரது தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 
ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார்.
 
கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
 
சவுதி அரேபியாவில் பிறந்த பாலஸ்தீன அகதியாக அவருக்கு, முதலில் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறையும், 800 கசையடிகளும் விதித்து தீர்ப்பளித்தது.
 
பின்னர் அவர் மேல்முறையீடு செய்தபோது அது நிராகரிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி வேறு ஒரு நீதிபதி வழக்கை விசாரித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அவரது சார்பாக நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
 
மரண தண்டனை மீது மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
அவர் பாலஸ்தீனியர் என்பதாலும், சவுதியிலுள்ள மதக்காவல்துறையினர் ஒரு ஆளை அடுத்து நொறுக்குவதை காட்டும் வீடியோவை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாலுமே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img