Vegetable Dosa - 2026

ஒரு மாற்றாக இத ட்ரை பண்ணுங்க.. மரக்கறி தோசை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Vegetable Dosa - 2026

மரக்கறி தோசை

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப் பாசிப்பருப்பு – முக்கால் கப்
காய்ந்த மிளகாய் – 15
சோம்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் வெங்காயம், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து சிறிதளவு எண்ணெய் தடவி, மாவைச் சிறிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தோசைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.