palakai piratel - 2026

பக்காவா செய்யுங்க.. பலாக்காய் பிரட்டல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
palakai piratel - 2026

பலாக்காய்ப் பிரட்டல்

தேவையான பொருட்கள்:
பலாக்காய் – அரை கிலோ உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – ஒன்று
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:
தேங்காய்த் துருவல் – கால் கப்
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 3 பல்
சோம்பு, சீரகம், கசகசா – தலா ஒரு டீஸ்பூன்
முந்திரி – அரை டேபிள்ஸ்பூன் (நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்).

தாளிக்க:
சோம்பு – கால் டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
பிரியாணி இலை – ஒரு துண்டு.

செய்முறை:
உருளைக்கிழங்கு, பலாக்காயைத் தோல் நீக்கிப் பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேகவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலா, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, வேகவைத்த பலாக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி, நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.