seeyam - 2026

சீறார்களை கவரும் இனிப்புச் சீயம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
seeyam - 2026

இனிப்புச் சீயம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி, உளுத்தம்பருப்பு – தலா அரை கப் உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

பூரணம் செய்ய:
மலர வேகவைத்த பாசிப்பருப்பு – கால் கப் தேங்காய்த் துருவல் – அரை கப்
பொடித்த வெல்லம் – ஒன்றரை கப் ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை
நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும். அதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பிறகு, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி, இறக்கி ஆறவிடவும். இதுவே பூரணம். பச்சரிசியுடன் உளுத்தம்பருப்பு சேர்த்துக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக இட்லி மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். பூரணத்தை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பூரண உருண்டைகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.