ஒரு மழையின் மாலையில்.. கார உருண்டை!

Published:

kola urudai - 2026

கார உருண்டை

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வேர்க்கடலை – 50 கிராம்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – ஒன்று (அ) இரண்டு (சிறியதாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு நெய் (அ) எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலை மாவை வாசம் வரும் வரை வறுத்து ஆறியதும் தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வெதுவெதுப்பான நீர்விட்டுப் பிசையவும். மாவைக் குட்டிக் குட்டி உருண்டைகளாக உருட்டி இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, உருண்டைகளைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாகச் சாப்பிடவும்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img