
மோடியின் தாயார் கலந்து கொண்ட ஒரே ஒரு பொது வெளி விழா இதுதான். இந்த விழாவிலும் அவர் ஏன் கலந்து கொண்டார் தெரியுமா?!
குஜராத் முதல்வர் பாரதப் பிரதமர் என்று இந்திய அரசியலில் பல உச்சங்களை மோடி கடந்த போதும் அதற்கான எந்த விழாவிலும் அவருடைய குடும்பத்தினர் பங்கு பெற்றது கிடையாது. எந்த விழாவிலும் மோடி அவர்களின் தாயாரே பங்கு பெற்றது கிடையாது.
ஆனால், மோடியின் தாயார் மோடியிடம் விரும்பி வேண்டி ஒரே ஒரு விழாவில் பங்கு பெற வந்து இருந்தார். 1992ல் குடியரசு தினத்தின் பொழுது காஷ்மீர் பயங்கரவாதிகளின் சவாலை ஏற்று ஸ்ரீநகரில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி சாதனை படைத்து விட்டு குஜராத் திரும்பிய மோடியை வரவேற்று அகமதாபாத்தில் அவருக்கு வெற்றி திலகம் இட்ட மக்களில் அவரும் ஒருவராக கலந்துக் கொண்டு மோடியின் நெற்றியில் திலகம் இட்டு மோடியை ஆசிர்வாதம் செய்து இருந்தார்.
1992ல் காஷ்மீர் பயங்கரவாதிகளின் இந்தியாவுக்கு விடுத்த சவால் என்ன தெரியுமா?
ஒரு தாய்க்கு பிறந்த உண்மையான ஆண்மகன் யாராவது இந்தியாவில் இருந்தால் அவர்கள் காஷ்மீர் வந்து ஸ்ரீநகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி விட்டு உயிருடன் திரும்ப முடியுமா? என்று பார்ப்போம் என சவால் விட்டு இருந்தார்கள்.
அந்த சவாலை ஏற்று தன்னுடைய மகன் நரேந்திர மோடியை காஷ்மீருக்கு அனுப்பி ஸ்ரீநகரில் லால்பார்க்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வைத்தார் ஹீரா பென். அப்படி லால்பார்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டு வந்த தன் மகனை வரவேற்று ஆசிர்வாதிக்க பொது வெளியில் நடைபெற்ற கட்டத்தில் கலந்து கொண்டார் ஹீரா பென்.
காஷ்மீரில் இருந்த கோழைகள் துப்பாக்கி முனையில் இங்கு வந்து, யாராவது ஒரு தாய்க்குப் பிறந்த ஆண்மகன் இந்தியாவின் தேசியக்கொடியை இங்கே ஏற்ற முடியுமா? என்று சவால் விட்டதும், அந்த சவாலை ஏற்று தன் மகன் அங்கே சென்று அதனை நிறைவேற்றியதைக் கொண்டாட ஒரு
இந்திய வீரத்தாயின் அடையாளமாக வெளி உலகில் கலந்து கொண்டாரே தவிர மோடியின் பாசத்தாயாக அல்ல.!





