குமாரபாளையம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்டவர் கொலை..மூவர் கைது

gowtham.jpeg - 2026

குமாரபாளையம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞரணிச் செயலாளரும் நிதி நிறுவன உரிமையாளர் கத்திக்குத்து காயங்களுடன் ஏரிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டது இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இக் கொலை தொடர்பாக மூவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

குமாரபாளையத்தை அடுத்த பாதரையைச் சேர்ந்தவர் கௌதம் (35). கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞரணிச் செயலாளரான இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 22-ஆம் தேதி இரவு வீட்டுக்குச் செல்லும் வழியில் மர்ம கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டார்.  கடத்தப்பட்ட சிறிது நேரத்தில் நகை, பணத்தை தயாராக வைக்குமாறும் தான் கூறும் ஒருவரிடம் கொடுத்து விடுமாறும் தனது மனைவிக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் ஆறு தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சங்ககிரி ரயில் நிலையம் அருகே உள்ள வடுகப்பட்டி ஏரிக்கரையில் கத்திக்குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் கௌதம் உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பணம் கொடுக்கல், வாங்கல் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

இச்சூழலில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி தீபன், பிரகாஷ், குணசேகரன் ஆகிய மூவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை வெப்படை காவல் துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories