தடுப்பூசி போடலைன்னா… பொது இடங்கள்ல வர தடையாம்! இது மதுரை ஆட்சி!

தலையங்கம்
madurai collector annct - 2026

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. ஹோட்டல், பார், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது. திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுக்கும் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் இவ்வாறு உத்தரவு பிறபித்துள்ளார்…

இதனிடையே, தடுப்பூசி போடச் சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே! மதுரை ஆட்சியரின் கட்டாய உத்தரவு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் உள்ளதே என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை, தடுப்பூசி போடுங்க என்று கட்டாயப் படுத்தலை…. போட்டுக்கலைன்னா பொது இடங்களில் நடமாட முடியாது என்றுதான் சொல்கிறோம்.. என்று விளக்கம் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

மதுரை தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பின் தங்கி இருக்கிறது என்பதால்தான் இத்தகைய அறிவிப்பை ஆட்சியர் பெயரில் செய்திருக்கிறார்கள் என்று கூறுகின்றனர் சிலர்.

மதுரைக்கு, இரண்டு ஹை ப்ரொஃபைல் அமைச்சர்கள் இருந்தும் தினசரி ஊடகங்களில் விளம்பரம் போல் பெயர் வரும் வகையில் விளம்பற வேலையில் துடிப்பாக இருக்கும் மக்களவை உறுப்பினர் ஒருவர் இருந்தும், மதுரையில் தடுப்பூசி வேகம் பின் தங்கி இருக்கிறது.

ஜூன் மாதத்தில் மதுரையின் ‘விளம்பர’ மக்களவை உறுப்பினர், தமது மக்களவை உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து 20 லட்சம் ருபாய் செலவில் ஒரு தனியார் நிறுவனத்திடம் சித்த மருந்துகள் வாங்கி வழங்கும் விழாவை நடத்தினார். ஏன் அவர் அரசு நிறுவனத்திடம் இருந்தோ கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்தோ சித்த மருந்துகளை வாங்கவில்லை என்றோ, சித்த மருத்துவர் மேற்பார்வை இல்லாமல் யாருக்கெல்லாம் இப்படி மருந்து கொடுத்தார், அதனால் என்ன பயன் ‘விலை’ந்தது என்றோ நாம் கேட்டுவிடக் கூடாதுதான்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.