
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றத்திற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அணைகள் நாட்டின் சொத்துக்கள் என மத்திய அரசு தன் கட்டுபாட்டில் எடுத்திருப்பதற்கு இவர் ஏன் கண்டனம் தெரிவிக்கின்றார் என்பதுதான் தெரியவில்லை! இச்சட்டத்தின் மூலம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் உள்ள, தமிழகத்துக்கு நீர்வழங்கும் அணைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் தமிழகத்துக்குத்தான் நல்லது!
தமிழகம் இப்போதும் தண்ணீரைத் திறந்துவிடும் ஒரே மாநிலம். வங்கக் கடல் என்பதால் தமிழகத்தின் எந்த உரிமையும் இங்கே பறிபோகாது!
தமிழகத்துக்கும் அதன் முன்னால் இருக்கும் மாநிலங்களுக்கும் இருக்கும் அணை சண்டையில் மிக சாதகமான இந்த அணுகுமுறையினை திமுக ஏன் எதிர்க்கின்றது என்பதுதான் தெரியவில்லை! தெரியாத மர்மங்களுக்கும் புரியாத கொள்கைக்கும் பெயர்தான் திராவிடம் என்பது மறுபடியும் நிரூபிக்கபட்டிருக்கின்றது!
- ஸ்டான்லி ராஜன்