6 நாட்களும் பள்ளி இயங்கும்: பள்ளி கல்வித்துறை!

Published:

school
school

தமிழகத்தில் ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல் பள்ளிகள் இயங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளது. இதனையடுத்து பொதுத் தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல் வகுப்பு நடத்தி பாடங்களை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை மட்டுமே பள்ளிகளில் வகுப்பு எடுக்க முடியும். அதனால் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தும் போதே ஆய்வாக பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img