கொரோனா காலத்தில் விதி மீறிய வழக்குகள் ரத்து! தென்காசியில் முதல்வர்!

சற்றுமுன் தமிழகம்
cm-1
cm-1

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ‘கொரோனா காலத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக தமிழகத்தில் பதிவான 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தின் போது, பொது மக்கள் மீதும் போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.1,500 வழக்குகள் பதிவான நிலையில், சில வழக்குகளை தவிர அனைத்தும் ரத்து செய்யப்படும்,’என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.