school - 2026

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆக.2-ஆம் தேதிமுதல் பள்ளிகளுக்கு தினமும் வர வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி, கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாடநூல்கள் மற்றும் கற்பித்தலுக்குத் தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களைத் தூய்மை செய்தல், கல்வித் தொலைக்காட்சி மூலமாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தலைமை ஆசிரியா்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆக.2-ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவா்கள், இதயநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில், அவர்கள் பள்ளிக்கு வர விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending