அதிர்ச்சி..! அண்ணா பல்கலை., தேர்வில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேறவில்லை!

Published:

16 July06 Anna University - 2026

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளில், தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 61 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கு குறைவான மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சிகரமான தகவல்!

Related articles

Recent articles

spot_img