23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி… தன் சாதனையை தானே முறியடித்த பெண்!

உலகம் சற்றுமுன்

sherpa kami rita - 2026

எவரெஸ்டில் 23 முறை ஏறி, தான் படைத்த சாதனையை தானே முறியடித்து சாதனை படைத்துள்ளார் ஒரு பெண்!

நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர்பா காமி ரீடா என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தில் 23 முறை ஏறி உலக சாதனை படைத்துள்ளார்!

பக்கத்து நாடான நேபாளத்தில்  தாமே கிராமத்தைச் சேர்ந்த காமீ ரீடா ஷெர்பா என்ற 49 வயதான பெண்மணி, இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 22 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார்

நேபாள நாட்டைச் சேர்ந்த இருவர் இவருடன் 21 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உள்ளனர். 2017ல் அவர்கள் இருவருடன்  இணைந்து மலையேறினார் ஷெர்பா. கடந்த ஆண்டு இருபத்தி இரண்டாவது முறையாக மலையேறிய சுமிதா செர்ப்பா மற்றும் ரூபாவின் சாதனையை முறியடித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இருபத்தி மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த காமீரீடா சேர்ப்பா தன் உலக சாதனையை தானே முறியடித்துள்ளார். புதன் கிழமை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இவருடன் சென்ற குழுவினர் அனைவரும் பத்திரமாக இருப்பதாக எவரெஸ்ட் மலையேற்றக் குழு தெரிவித்துள்ளது.

29.035 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 21 முறை இவருடன் இருந்த இருவரும் ஏறியுள்ளனர். ஆனால் இருவரும் மலை ஏற்றத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இதனால் ஷெர்பா 23 வது முறையாக ஏறும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

மலை ஏறுவது என் வேலை. ஆனால் அதே நேரம், நான் நேபாளத்தின் பெயரைத் தாங்கி ஒரு உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறேன் என்கிறார் ரீடா ஷெர்பா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.