ஜுன் 8ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம்!

கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

16 July19 Neet - 2026

ஜூன் 8ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதால், அன்றைய தினம் நடைபெற இருந்த பி.எட். தேர்வு வேறுத் தேதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் 8, 9- ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், பி.எட் கடைசி ஆண்டு தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், இரண்டு தகுதித் தேர்வுகளையும் எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் ஜூன் 8-ஆம் தேதி ஆசிரியர் கல்வியியல் – பிஎட்., தேர்வும் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த இரண்டு தேர்வுகளும் முக்கியமானவை என்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்க, ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்ற தமிழக உயர் கல்வித் துறை, ஜுன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு ஒத்திவைக்கப் பட்டது.

அதன்படி, 13-ஆம் தேதி பிற்பகல் இந்தத் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.