தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்!

Published:

heat - 2026

தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.

தமிழகத்தில் கோடைக் காலமான அக்னி நட்சத்திர வெயில் பல இடங்களில் வாட்டி வதைக்கிறது. சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்தாலும் பெரும்பாலும் வெப்பமே தகித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் எட்டு இடங்களில் இன்று வெய்யில் சதம் அடித்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.

திருத்தணி – 107, வேலூர், திருச்சி, மதுரையில் 106, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தியில் – 104, சேலம், மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பம் பதிவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img