சாலையை பள்ளியாக்கி பாடம் நடத்திய ஆசிரியர்கள்!

கல்வி தமிழகம் புகார் பெட்டி பொது தகவல்கள்

school 4 - 2026கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் 50 ஆண்டுகளாக அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கு, செல்லும் வழியாக தனியார் பட்டா நிலத்தை  வழியாக  கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று வந்துள்ளனர்.jalli - 2026இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடு கட்டஜல்லி, மணல் ஆகியவற்றை அந்த வழியில் கொட்டி வைத்துள்ளார். பள்ளிக்கு செல்ல வழி விடாமல் வீடு கட்டி விடுவாரோ என நடுரோட்டிலேயே மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக்கு செல்ல வழிவிட்டு வீடு கட்டுவதாக அந்த நபரும் உறுதியளித்தார் பின், சாலை மறியல் கைவிடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.