குரூப் 2 தேர்வில் தமிழ் மொழி நீக்கம்: உண்மை என்ன?

Published:

13 July31 TNPSC - 2026

குரூப் 2 தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டது இப்படி செய்தியை சொல்லும் ஊடகங்கள்…..

உண்மை என்ன என்றால்…. தமிழ் தெரியாதவர்கள் குரூப்-2 , 2-A தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலையையே தற்போதைய பாடத்திட்டம் உருவாக்கியுள்ளது…

திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது..

தற்போது தமிழ் பாட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கவும் முதன்மைத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கட்டாயம் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இதன்மூலம் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே குரூப்-2 தேர்வு எழுத முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அப்படித் தேர்வு பெறாதவர்களின் அடுத்த தாள் திருத்தப்படாது அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..

எனவே இந்த திருத்தப்பட்ட பாடத் திட்டத்தின் மூலம் தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். பிற மாநிலத்தவர்கள் தேர்ச்சியடைய முடியாது.

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் தமிழருக்கே வேலை என்ற மறைமுக சட்டம் என்றே இதனை கூறலாம்.

இதெல்லாம் தெரிந்தும் ஊடகங்கள் இந்த உண்மை நிலையை சொல்லாமல் செய்தியை திரித்து சொல்வதன் மூலம் ஊடகங்கள் ஒன்று அறிவில்லாதவர்கள் நிறைந்த முட்டாள்களின் கூடாரமாக இருக்க வேண்டும் அல்லது விலை போய் விட்டன என்பதையே உணர முடிகிறது.

Related articles

Recent articles

spot_img