தூத்துக்குடியில் இஸ்ரோ கண்காட்சியை படம் பிடித்த இருவர்: உளவுத்துறை தீவிர விசாரணை!

Published:

policeinvestigation - 2026

தூத்துக்குடியில் இஸ்ரோ கண்காட்சியை புகைப்படம் எடுத்த ரபீக், ஜாபர் அலி ஆகியோரிடம் உளவுத்துறையினர் விசாரணைசந்தேகத்தின் அடிப்படையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ரபீக் வீட்டில் நடத்திய சோதனையில் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஹார்டு டிஸ்க், பாஸ்போர்ட் ஆகியவை பறிமுதல் ..

தூத்துக்குடியில் வஉசி கல்லுரி முன்பு சந்தேகப்படும் வகையில் கைதான நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த இருவரிடம் உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகரில் வஉசி கல்லூரியில் அடுத்த வாரத்தில் ISRO சார்பில் விண்வெளி Expo கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

policeinvestigation - 2026

நேற்று வஉசி கல்லூரி முன்பு சந்தேகப்படும் வகையில் இருவர் கல்லூரியை புகைப்படம் எடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது அவர்களிருவரும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த ரபீக் மற்றும் ஜாபர் அலி என்பது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி காவல்துறையினர் இவர்களிருவரிடம் விசாரித்து வரும் நிலையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்துள்ளனர்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

மேலும் இதில் ஒருவர் நேற்று முன் தினமும் மற்றொருவர் மூன்று தினத்திற்கு முன்பும் வெளி நாட்டில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து ஏன் இங்கே புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், அடுத்த வாரம் நடைபெறும் இஸ்ரோ நிகழ்ச்சியில் முக்கிய அறிவியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இது குறித்து சந்தேகம் அடைந்து நேற்று இரவு 11 மணி அளவில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் AC தலைமையில் சம்பந்தப்பட்ட இருவரது விட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர்.

அப்போது ரபீக் வீட்டில் 10 செல்போன்கள், பாஸ்போர்ட், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி வந்துள்ளனர். தற்போதும் காவல்துறை விசாரணை தொடர்கிறது.

Related articles

Recent articles

spot_img