
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டது .
இதில் தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவராக ராதாபுரம் தொகுதியைச் சார்ந்த கே .பி .கே .செல்வராஜ் என்பவரை அறிவித்துள்ளது .
இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் .
மேலும் ராதாபுரம் தாலுகா வீட்டு வசதி சங்க தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக சார்பில் மாவட்ட கூட்டுறவு இணைய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக சார்பில் 33 பூத்துக்களுக்குஅவர் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.
இத்தகைய சூழ்நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தொகுதி பொறுப்பாளராக அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.



