
பட்டாணி மசாலா சுண்டல்
தேவையானவை:
காய்ந்த பட்டாணி -ஒரு கிண்ணம்
இஞ்சி-பூண்டு விழுது -ஒரு தேக்கரண்டி
புதினா, கொத்துமல்லி – சிறிதளவு
சீரகம் – கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு -தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் -3
பட்டை -சிறிய துண்டு
ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று
சோம்பு – கால் தேக்கரண்டி.
செய்முறை:

காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, சீரகம், தாளித்து புதினா, கொத்துமல்லி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வேகவைத்த பட்டாணி, உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி (விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் தூவி) இறக்கவும்.



