
வெற்றிலை ஓமவல்லி கூட்டு
தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப்,
வெற்றிலை – 4,
ஓமவல்லி – 4 இலை,
தக்காளி – ஒன்று,
தேங்காய் துருவல் – கால் கப்,
பச்சை மிளகாய் – 4,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
எண்ணெய், கடுகு, பெருங்காயம் – தாளிக்க தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்புடன் பொடியாக நறுக்கிய வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து… குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
தேங்காய் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, பெருங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த பருப்பு கலவை, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
இந்தக் கூட்டு, சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
வேக வைத்த காய்கறிகள், உப்பு, ஊறிய ஜவ்வரிசி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, இறக்கி சூடாக பரிமாறவும்.



