மிக நீண்ட சரக்கு ரயில்! இந்தியன் ரயில்வே சாதனை!

Published:

train

சமீபத்தில் 2.8 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயிலை இயக்கி இந்தியன் ரயில்வே சாதனை படைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகளுக்கான சரக்கு ரயில்கள் இயங்கிவருகிறது. இந்நிலையில், 2.8 கி.மீ நீளமுள்ள ஷேஷ்நாக் என்ற ரயிலை இயக்கியுள்ளது இந்தியன் ரயில்வே.

ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இந்திய ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரயில்வே அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவில், ஷேஷ்நாக் ரயில் குறித்து பதிவிட்டிருப்பதாவது “4 ரேக்குகளை ஒன்றிணைத்து இந்த ரயில் இயக்கப்படுகிறது. இது 4 செட் மின்சார என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயில் இயங்கும் மிக நீண்ட ரயில் இது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

train

நாக்பூர் மற்றும் கோர்பாவிற்கு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பியூஷ் கோயலின் டிவீட்டிற்கு 15,300 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ள நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவிற்கு 2,700 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. இடுகைகளில் மக்கள் அனைத்து வகையான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த மாதம் ஓவர் ஹெட் கருவிகளை வைத்து இரட்டை அடுக்கு சரக்கு ரயிலை இயக்கி உலக சாதனை படைத்தது இந்தியன் ரயில்வே. அந்த வரிசையில், தற்போது 2.8 கி.மீ ரயிலையும் இயக்கி சாதனை படைத்துள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை, இந்திய ரயில்வே தனது தடையில்லா சரக்கு ரயில் சேவைகளின் மூலம் 178.68 மில்லியன் டன் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img