சுனாமி நினைவுகள்! அன்று நடந்ததும் பின்னணியும்!

tsunami 2004 memories - 2026

ஆழிப்பேரலை, டிசம்பர் 26, 2004 – அந்த இரண்டு மணி நேரம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பூமிக்கடியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக திரண்டுகொண்டிருந்த சக்தி திடீரென்று 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் ஓரு நிலநடுக்கமாய் வங்கக் கடலில் வெளிப்பட்டது. 1000 கிலோமீட்டர் நீளமான கடற்பரப்பில், சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு கடல் பரப்பில் கண்டத்தகடுகளுக்கிடையே இருந்த ஓரு பிளவு இந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமி அலைகளால் அன்று மாலைக்குள் பலிவாங்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வக் கணக்கின்படி 1,84,167. சுமார் 2.5 இலட்rம் மக்கள் இறந்திருக்கக்கூடும் என்பது வேறு ஓரு கணிப்பு.

இந்திய நேரப்படி டிசம்பர் 26, 2004 அன்று காலை 06 மணி 28 நிமிlத்திற்கு சுனாமி அலைகளை எழுப்பிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. சுனாமியின் முதல் அலைகளால் இந்தியக் கடற்கரை, குறிப்பாகத் தமிழகக் கடற்கரை தாக்கப்பட்டது காலை 0830 மணிக்காகும். இந்த இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது ? இயற்கை நமக்கு நடத்திய பாடம் என்ன ?

இந்திய நேரம் காலை 06:28க்கு வடக்கு சுமத்ராவுக்கு 60 கிமீ மேற்கில் இந்தோ/ஆஸ்திரேலிய கண்டத்தகடும் யூரேசிய கண்டத்தகடும் ஓன்றின்மேல் ஓன்று சரிந்ததால் ஓரு நிலநடுக்கம் ஏற்படுகிறது. 10,000 அணுகுண்டுகள் வெடிக்கும்போது ஏற்படும் சக்தியை இந்த நிலநடுக்கம் வெளிக்கொணர்கிறது.

06:29க்கு இந்jனோசியாவின் படாங் நகரில் ஓரு நில-இயற்பியலாளரால் தன்னுடைய நிலநடுக்க அளவியிலிருந்து, ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவுள்ள நிலநடுக்கம் அருகாமையில் நிகழ்ந்துள்ளது என அறிகிறார். ஜகார்த்தாவில் உள்ள தேசிய நிலநடுக்க மையத்திற்கு செய்தி அனுப்ப முயற்சிக்கிறார், ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.

இந்திய நேரம் 06:34க்கு பசுபிக் சுனாமி மையத்தில் பணிபுரியும் இருவர் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுப்படி 7.0ஆக இருக்கலாம் என முடிவு செய்து, அவர்களின் எச்சரிக்கை வலையத்துள் உள்ள நாடுகளுக்கு அறிக்கை அனுப்புகின்றனர். சிறிது நேரத்தில், சில கணக்கீடுகளுக்குப் பிறகு நிலநடுக்கத்தின் அளவு 8.0ஆக இருக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தாய்லாந்து நாட்டிலும் இந்த அறிக்கை பெறப்படுகிறது. ஆனால் சுற்றுலாத் துறைக்கு பொருளாதார அளவில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற விவாதத்தில் சுனாமி எச்rரிக்கை தருவதில் தாமதமேற்படுகிறது. அடுத்த ஆறு நிமிlத்தில் சுனாமி சுமத்ராவின் பந்தா ஏக் பகுதியைத் தாக்குகிறது.

08:31க்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சுனாமி எச்சரிக்கை தரப்படுகிறது. ஆனால் தூதரக உறவுகளில் உள்ள சிக்கல்கள் காரணமாய் சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்படக்கூடிய நாடுகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படவில்லை. உலகிலேயே மிக அதிநவீன கருவிகளோடு இயங்கும், ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரத்தில் அமைந்துள்ள நிலநடுக்க எச்சரிக்கை மையம் உலகெங்கிலுமுள்ள 300 நிலையங்களிலிருந்து நிலநடுக்கம் பற்றிய தகவல்களைப் பெறுகிறது.

இம்மையத்திலுள்ள கணினிகள் நிலநடுக்கம் பற்றியும் சுனாமி பற்றியும் தானாகவே தகவல்கள் பெறக்கூடிய வசதியுடையது. இருப்பினும் அங்கிருந்து எந்தத் தகவலும் அல்லது எச்சரிக்கையும் தரப்படவில்லை. ஏனெனில் அன்று அந்த மையத்திற்கு விடுமுறைநாள்.

பசுபிக் சுனாமி எச்rரிக்கை மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அந்த இரண்டு அறிவியலாளர்கள் கடந்த ஓரு மணி நேரமாக தங்களின் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் புதிய கணக்குகள் நிலநடுக்கத்தின் வலு ரிக்டர் அளவுகோலில் 8.5ஆக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கிறது. இது நிலநடுக்கத்தின் சக்தி முன்னர் நினைத்ததைவிட பத்து மடங்கு அதிகம் என்பதனைக் காட்டியது.

குழப்பத்தில் ஆழ்ந்த அவர்கள் தங்களின் தலைவருக்கு தகவல் தருகின்றனர். இருப்பினும் பேரழிவைத் தரக்கூடிய சுனாமியை இந்நிலநடுக்கம் உருவாக்கும் என்ற எண்ணம் இன்னமும் இங்கு யாருக்கும் தோன்றவில்லை. இருப்பினும் இருபது நிமிlங்களுக்கப் பிறகு மீண்டும் ஓரு புதிய எச்சரிக்கை தரப்படுகிறது.

இந்திய நேரம் காலை 09:50க்கு தாய்லாந்தின் சுற்றுலாத்தலமான புகெட் நகரை சுனாமி அலைகள் தாக்குகின்றன. சில நிமிlங்களில் இந்திய மற்றும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையை சுனாமி தாக்குகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய உடனடித் தகவல்கள் உலகத் தொலைக்காட்சிகளில் வெளிவரத் தொடங்குகிறது.

அதுவரை உறங்கிக் கொண்டிருந்த, அறியாமையில் விழித்துக் கொண்டிருந்த, கிறிஸ்த்மஸ் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருந்த உலகம் சுனாமி என்கிற ஓரு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளதை உணரத் தொடங்கியது.

சுனாமி அலைகள் தொடர்ந்து மாலத்தீவுகள், ஆப்பிரிக்கா நோக்கி நகருகின்றது என உணரப்பட்டது. இயற்கை நமக்களித்த அந்த இரண்டு மணி நேரம் நம்மை நாம் காத்துக்கொள்ள பயன்படவில்லையா ?

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் சுனாமி பற்றி மக்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்ளின் நிலவியல் பாடத்தில் சுனாமி இடம் பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டு வரை தேர்வுகளில் ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ பகுதியில் ஓரு மதிப்பெண் தரக்கூடிய செய்தியாக அது இருந்தது. தமிழ் இலக்கியங்களிலும் ‘சுனாமி’ என்ற ‘கடல்கோள்’ பற்றிய செய்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளன.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
என்று கலித்தொகையும்

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடு’ கொடுங்கடல் கொள்ள – எனச் சிலப்பதிகாரமும் கடல்கோள் பற்றி நேரடியாகவே குறிப்பிடுகின்றன. 1883ஆம் ஆண்டு இந்தோனேசியப் பகுதியில் ஏற்பட்ட ஓரு எரிமலை வெடிப்பால் சென்னை உட்பட பல இடங்களைத் தாக்கிய சுனாமி பற்றிய ஓரு வரலாற்றுக் குறிப்பும் 1945இல் பாகிஸ்தானின் ‘மகரான்’ கடற்கரைப் பகுதியில் ஏற்ப்பட்ட ஓரு நிலநடுக்கத்தால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகள் பாதிப்புக்குள்ளான மற்றொரு வரலாற்றுக் குறிப்பும் நமக்கு முன்னரே கிடைத்திருந்தன.

கடுமையான புயல்கள் இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் கரையைக் கடக்கும் போது சுனாமி அலைகள் போன்ற ஆனால் சற்றே அளவு குறைவாd ‘பொங்கலைகள்’ ஏற்படுவதும் நாம் அறிந்ததே, ஆயினும் இந்தியா போன்ற தகவல் தொழில்நுட்பம் சிறப்பான அளவில் இருக்கும் ஓரு நாட்டில் சுனாமி எச்சரிக்கைக் கட்டமைப்பு ஏற்படுத்தாது பற்றி டிசம்பர் 2004க்கு முன்னர் எவரும் நினைக்கவில்லை.

ஆனால் 2004க்கப் பிறகு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கரையோரப் பகுதிகளில் அலைகளின் உயரத்தைக் கணக்கிட ‘பொங்கலைமானிகள்’ (tide gauges) அமைக்கப்பட்டுள்ளன, இவை புயற்கால பொங்கலைகள் பற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்க மிகவும் உதவியாக இருக்கின்றன.

ஆனால் சுனாமி அலைகளைக் கண்காணிக்க, வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்க ஆபத்து அதிகமுள்ள ‘லைன் ஆப் ஃபயர்’ (line of fire) என்ற பகுதியிலிருந்து வரக்கூடிய சுனாமி அலைகளைக் கண்டுபிடிக்க அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய ஓரு கட்டமைப்பு தேவைப்பட்டது. இதற்கென வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

எனவே முழுவதும் இந்திய் தொழில்நுட்பத்தால் அமைந்த ‘தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம்’ 2007ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் ஹைதராபாத்தில் தொடங்கப்பgட்டது. தற்போது ரிக்டர் அளவுகோலில் 6.0த்திற்குமேல் சக்தியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டால் அது தேசிய நிலநடுக்க மையத்தின் நிலநடுக்கமானிகளின் வலையமைப்பு மூலமாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும்.

ஆழ் கடலில் அமைக்கப்பட்டுள்ள கடல் அடிமட்ட அழுத்த உணரிகள், சுனாமி அலைகள் உருவாகியிருந்தால் அதனை உறுதி செய்யும். ‘சர்வே ஆப் இந்தியா’ சுனாமி அலைகள் நகர்வதைக் கண்காணிக்க 30 பொங்கலைமானிகளை அமைத்துள்ளது. ‘இன்டகரேட்டட் கோஸ்டல் அண்ட் மரைன் ஏரியா மேனேஜ்மென்ட்’ (Integrated Coastal and Maraine Area Management) என்ற அமைப்பு கணினியில் சுனாமி மாடல்களை (Tsunami Models) உருவாக்கி இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் எவ்வெப்பகுதிகள் சுனாமி தாக்குதலால் அதிகமான பாதிப்பைப் பெறகூடியவை என்று கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கணினி மாடல்களுக்குத் தேவையான கடலோரப் பகுதிகளின் வரைபடங்களை நேசனல் ரிமோட் சென்சிங் நிறுவனம் (National Remote Sensing Agency – NRSA) தன்னுடைய கார்டோசாட் (Cartosat) செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் தjருகிறது. சுனாமி எச்சரிக்கைகுத் தேவையான தகவல்களை உடனடியாகப் பெற்றுத் தருவதில் இஸ்ரோ (ISRO) தன்னுடைய செயற்கைக்கோள்கள் மூலம்  துணைபுரிகிறது.

இவ்வாறு அந்த இரண்டு மணி நேரம் இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories