முன்பு அத்தனை சதவீத தம்பதியர்களிலும் ஆண் பொருள் ஈட்டுவதும் பெண் பிள்ளை பெற்று வளர்ப்பதும் குடும்பப்பொறுப்புகளை ஏற்பதும் என இருந்தது. திருமண விலக்கு பெற்ற ஒரு பெண் மறு திருமணம் என்பது இல்லவே இல்லாதிருந்தது. இந்நிலையில் விவாகரத்து என வந்தால், அதன் பின் ஒருவர் புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிப்பதும் அதில் முன்பு இருந்த பொருளாதாரத் தரத்தில் குடும்ப வாழ்வை தொடர்வது இயலாத காரியம். ஏனெனில், பிள்ளை பெறுதல் வளர்த்தல் என இருந்த காலத்தில் அவளது வெளி வேலை/அனுபவம் என்பது “இல்லை”எனும் கட்டத்தில் தேங்கி நிற்கிறது. அது போக, கைக்குழந்தை இருந்தால் அவர்களை வைத்துக் கொண்டு வெளி வேலைக்குப் போவதும் இயலாது. ஆகவேதான் விவாகரத்தின் போது பெண்ணுக்கு ஆண் ஜீவனாம்சம் தருவது எனும் நிலைப்பாடு தோன்றியது. அதுவும் அந்தப் பெண் மறுவிவாகம் செய்து கொண்டால் அப்படிச் செய்யும் வரை மட்டுமே ஜீவனாம்சம் கிடைக்கும். இதனை சட்டம் மறுவிவாகத்தைத் தடுப்பது போலத் தோன்றினாலும், ஜீவனாம்சத்தின் தேவை பெண்ணின் மறு விவாகத்தோடு முடிவடைந்து விடுவதால் அதன் பின் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவை இல்லை. இதே நிலைதான் ஆண் ஜிவனாம்சம் பெறும் நிலையிலும். ஜிவனாம்சம் பெறுபவர் மறு விவாகம் செய்து கொண்ட பிறகும் ஜிவனாம்சம் பெற முடியாது. ஏனெனில் அதன் தேவை முடிவடைந்து விடுகிறது. சமீப காலங்களாக வீட்டுப்பொறுப்பை ஏற்று குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கும் ஆண்கள் வர ஆரம்பித்திருப்பதால், அதே போல அந்த காலகட்டங்களில் அந்த ஆணுக்கு அவனது வெளி வேலையில் கிடைத்திருக்கக்கூடிய எக்ஸ்பீரியன்ஸ் பீரியட் இல்லாமல் ஆகிவிடுகிறது. அதனால் பெண் பொருளீட்டி, ஆண் குடும்பப்பொறுப்ப்பை ஏற்றிருக்கும் தம்பதியரிடையே விவாகரத்து என வருமேயானால், அந்தப் பெண், அந்த ஆணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும். அதே போல, ஆண் வேலைக்குப் போகிறான். பெண் குடும்பப்பொறுப்பில் இருந்திருக்கிறாள். இநிநிலையில் ஜிவனாம்சம் பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்தாலும், எதோ ஒரு கட்டத்தில் பெண்ணும் நிறையவே சம்பாதிக்க ஆரம்பிக்கிறாள். இந்த கட்டத்தில் ஆண் அதை நிரூபித்து ஜீவனாம்சம் தருவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே போல, பெண் சுமாராகவே சம்பாதித்துக் கொண்டிருந்தாலும், அந்த ஆண் விபத்து, நோய் போன்ற காரணங்களால் முன்பைப் போல பொருள் ஈட்ட இயலாமல் போனால் அவன் பெண்ணிடமிருந்து ஜிவனாம்சம் பெறத் தகுதியானவனாகிறான். குழந்தை எவரிடம் இருக்கிறதோ அவர் அனேக சமயங்களில் பொருளீட்ட இயலாதவராக ஆகும்பட்சத்தில் நீதிமன்றமும் அவருக்கே முன்னுரிமை வழங்குமல்லவா? அதனாலும் கூட குழந்தைகள் தன்னிடம் இருக்க வேண்டும் எனச் சொல்வதும், அடுத்தவருக்கு ஜிவனாம்சம் தர விரும்பாததால், தன் வேலையை விட்டுவிடுவதும், அல்லது வியாபாரம்படுத்துவிட்டது எனப் பொய்க்கணக்குக் காட்டுவதும். மொத்த சொத்துக்களை வேறு உறவினர் பெயரில் மாற்றுவதும் நடக்கிறது. அதனாலேயே நீதிமன்றங்கள் ஜிவனாம்ஸ வழக்குகளில் ஜிவனாம்சம் தர வேண்டியவர்/பெறவேண்டியவர் சமீபத்தில் சொத்து மாற்றம் ஏதும் செய்திருக்கிறாரா என்பதையும் கவனத்தில் கொள்கிறது. பெண் ஜீவனாம்சம் தருவதைப் பற்றி முதன்முதலில் பேசியதே (women’s charter) பெண்களின் உரிமைகளுக்கான சட்டதிட்டங்களிப் பரிந்துறைக்கும் ஒரு அமைப்பு சமீபத்தில் இது பற்றிப் பேசி இருந்தது. ஆணுக்கும் அவன் பொருளீட்ட இயலா நிலையில் இருந்தால் மனைவி தரச்சொல்லுதல் சரி என்றாலும், இது வரை குடும்பம் என்பதில் ஆண் பெண் இருவரின் சம பங்கு பற்றி இதுவரை எவரும் பேசியதாகத் தெரியவில்லை. ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை இருவருடையதும்தான். ஆணின் குழந்தையும்தான் பெண்ணின் குழந்தையும்தான். விவாகரத்து என வந்தால் அவர்களில் இருவரில் ஒருவர் பொறுப்பில் குழந்தை ஒப்படைக்கப்படும். நீதிமன்றம் இருவரில் எவர் குழந்தையைப் பொறுப்போடு பார்த்துக்கொள்வார்கள் என கணித்தே குழந்தையை ஒப்ப்படைக்கும். இங்கே குழந்தையின் நன்மை மட்டுமே நீதிமன்றத்தால் கவனத்தில் கொள்ளப்படும். அது போலவே அந்தக் குடும்பம் சம்பாதிக்கும் தொகை முழுமையுமே அவர்கள் இருவருடையதும் ஆகும். பெண் சம்பாதித்தாலும் சரி ஆண் சம்பாதித்தாலும் சரி. அவர்கள் இருவரின் மொத்த வருமானமும் சொத்துக்களும் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு, அவை அதன் பின் இரண்டாக்கப்பட்டு, பின் இருவராலும் பகிரப்பட வேண்டும். உதாரணமாக, ஒருவர் 8000 சம்பாத்தியமும், மற்றவர் 12000 சம்பாத்தியமும் சம்பாதித்தாலும் அது பொதுவாக்கப்பட்டு ஆளுக்குப் 10000 என்றாக்கப்பட வேண்டும். அதன் பின், அந்தத் தொகையிலிருந்து குழந்தைக்கு ஆகும் தொகை இருவராலும் சரி பாதியாகப் பகிரப்பட வேண்டும். இது முதல் கட்டம் மட்டுமே.. இவை எல்லாம் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில்.. ஆனால் குழந்தைபெறுவதற்கு முன்னமே விவாகரத்தானால், பொருளாதாரத்தில் உயர்வில் இருப்பவர் தாழ்வில் இருப்ப்பவருக்கு ஜிவனாம்ஸம் தர வேண்டும் என இருந்தாலும், இன்றைய சமூகத்தில் விவாகரத்தான பெண் சமூகத்தில் விவாகரத்தான ஆணைப் போலவே சம அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதற்கான சமூக மாற்றம் வரும் வரை பெண்ணின் ஜீவனாம்சம் இருக்கும். இப்போது மாறிவரும் கால்ச்சூழலில் ஆணும், குடும்பப்பொறுப்பு காரணமாக வெளி வேலைக்குச் செல்லாமல் இருக்கும் வாழ்வு முறையைத் தேர்ந்தெடுப்பதும் அதிகரித்துவருவதால், பெண் தர வேண்டிய ஜீவனாம்சக்கணக்கில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். – ஹன்ஸா (தினமலர் நாளிதழில் வெளியானது…)
ஆண்களுக்கு ஜீவனாம்சம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari