தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பை கண்காணிக்கிறது தேர்தல் ஆணையம்

இந்தியா

புது தில்லி: தில்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் பிப்., 7ல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு தில்லியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தில்லி பகுதியில் நடத்தப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்கும் தேர்தல் ஆணைய அலுவலர்கள், அங்கே ஏதேனும் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.. தில்லியில் நடைபெற்று வரும் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆணைய அதிகாரிகள் ஏற்கெனவே உன்னிப்பாக இருந்து வருகின்றனர். அங்கே ஏதும் விதிமீறல் இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்., கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் மேற்குறிப்பிட்ட தகவல்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தம்மிடம் சொன்னதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.