December 5, 2025, 9:05 PM
26.6 C
Chennai

அந்த 700 கோடியின் பின்னால் இருக்கும் சூட்சுமம்…?

binarayi vijayan - 2025

ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருடாந்திர பட்ஜெட் போடும் ஒரு மாநில அரசுக்கு 700 கோடி என்பது ஒரு பெரிய தொகையா? ஏனிந்த பரபரப்பு?

கம்யூனிஸ்ட்களைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தத் தெரியாது அல்லது இயலாது. அவர்களின் ஒரே கேடயம் எளிமை மட்டுமே அதுவும் கூட தெருவோர டீக்கடையில் போய் டீ குடிப்பது, பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகளில் திடீரென பயனிப்பது போன்ற ஸ்டண்டுகள் மட்டுமே! (ஆனால், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் குட்டிக் கார்பொரேட் முதலாளிகளாக இருப்பர்.)

அவர்களின் நிர்வாகச் சாதனைகள் என்று எதையும் முன்னிறுத்தி அவர்களால் இது வரை ஓட்டுக் கேட்கவே முடிந்ததில்லை. கம்யூனிஸ்ட்கள் அறிவாளிகள், பொருளாதார நிபுனர்கள், உழைக்கும் மக்களின் பாதுகாவலர்கள் என்ற மாயையை மக்களிடம் உருவாக்கி வைத்திருந்தனர். அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து இப்பொழுது இந்தியா முழுவதும் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. பல்லியின் அறுந்த வால் போல கேரளாவில் மட்டும் கொஞ்சம் துடிச்சுட்டு இருக்கு.

அதற்கும் இப்பொழுது வெள்ளச் சேதாரம் வழியாக பெரும் பிரச்சினை வந்து விட்டது. எந்த நிர்வாகத் திறனும் இல்லாத கம்யூனிஸ்ட் அரசுக்கு, இயற்கைப் பேரிடரைக் கையாளத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டு மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது ஒரு பக்கம் கையறு நிலையென்றால்,

இப்படியொரு அமைப்பு நம் மாநிலத்தில் இருக்கிறது என்று பொதுமக்களுக்குத் தெரியாத அளவிற்கு இருந்த “சேவா பாரதி” என்ற ஆர்.எஸ்.எஸ் –ன் அங்கம், தன் நிர்வாகத் திறமையால், ஒற்றை அமைப்பாக இருந்து கொண்டு கிட்டத்தட்ட மொத்த மீட்புப் பணியையும் செய்து காட்டிக் கொண்டிருந்தது என்பது பினராயி அரசுக்கு அவமானத்தையும் கழிவிரக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்தது. (ராணுவ உதவிகளைத் தவிர்த்து).

இப்படி தன் அரசு ஏதும் செய்யாமலேயே மத்திய அரசான ராணுவமும், தன் பரம்பரை வைரியான ஆர்.எஸ்.எஸும் மக்களிடையே பெரும் ஈர்ப்பினைப் பெற்றதை எப்படி சமாளித்து அரசியல் செய்வது?

காலகாலமாக கம்யூனிஸ்ட் கட்சி செய்து வந்த வித்தையையே இப்பொழுதும் கையிலெடுத்தது. தன்னுடைய கையாலாகாததனத்தை மறைக்க பிறர் மீது குற்றம் சாட்டும் வித்தையே அது! மத்திய அரசிடம் என் மக்கள் துயர் துடைக்க 20 ஆயிரம் கோடிகள் கொடு என்று கோரிக்கை வைத்தது. அதீத பணம் கேட்டால் மத்திய அரசு கொடுக்காது என்று தெரிந்தே கேட்பது.

மத்திய அரசு நமக்கு உதவி செய்யாமல் துரோகம் செய்கிறது என்று விஷமப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டது. மத்திய அரசோ திட்டச் செலவினங்களை மனதிற் கொண்டு கைச் செலவுக்கு இந்தா 600 கோடி ரூபாய். சாக்கடை அடைப்பை நீக்குவது, எலெக்ட்ரிக் போஸ்ட்களைச் சரி செய்கிற வேலையை மட்டும் பாரு. மற்ற எல்லாவற்றையும் நாங்க பார்த்துக்கிறோம்னு களம் இறங்கிடுச்சு.

உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணானு கையைப் பிசைந்து கொண்டு இருந்த போது தான் லூலூ மால் ஓனர் அறிவித்த பொருளுதவி. அந்த ஒற்றைப் புள்ளியை வைத்து பினராயி கோலம் போட ஆரம்பித்தார். ஐக்கிய அரபு நாடுகள் கூட 700 கோடி கொடுக்கிறேன்னு முன் வருது மத்திய அரசு அதைத் தடுக்குது. அப்படியானால், அந்தப் பணத்தை மத்திய அரசே நமக்குக் கொடுக்கட்டும் என்று மக்களிடையே பரப்பினார்.

அரபு தேசம் பண உதவி செய்வதற்கு நன்றி பேனர்களெல்லாம் வைத்து தன் சித்து விளையாட்டினை நடத்தி வந்தார். ஏற்கனவே தாய்லாந்து உதவ முன் வந்த பணத்தை அரசின் கொள்கை முடிவைக் காரணம் காட்டித் தவிர்த்த மத்திய அரசு ஐக்கிய அரபு நாடு முறைப்படி கோரிக்கை வைத்தால் என்ன செய்யும் என்று ஊடகங்கள் ஆவலுடன் காத்திருக்கும் போது தான், அரபு நாட்டுத் தூதரகம், “நாங்கள் அப்படியொரு அறிக்கையே கொடுக்கவில்லை” என்று வெளிப்படையாக அறிவித்தது. பினறாயி என்றத் திருடனுக்குத் திரும்பவும் தேள் கொட்டியது.

இதே சம்பவம் முன்பு நடந்திருந்தால், அப்படியே சத்தமில்லாமல் அமுக்கியிருப்பார்கள். சமூக வலைதளம் வந்த பின் ஊடகவியலாளர்களை விட அதிகமாக செய்திகளைப் பரப்பிவரும் நெட்டிசன்கள்களின் தாக்குதலில் பினறாயும் கேரள கம்யூனிசமும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்நிலையில் தலைமேல் காத்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சேவாபாரதியின் தன்னலமற்ற சேவைக்குப் பரிசாக அந்தப் பதினான்கு மாவட்டத்திலிருந்தும் பெரிய பரிசாக பாஜகவுக்குக் கொடுப்போம் என்று கேரள நண்பர்கள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கின்றனர்.

இயற்கைச் சீற்றம் தம் வாழ்க்கை முறையை மட்டுமன்றி, அரசியல் நிலைப்பாட்டையும் திருத்திக் கொள்ள வழிவகை செய்கிறது போலும்!
காத்திருப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories