December 5, 2025, 9:30 PM
26.6 C
Chennai

கலவரக் காடாகி விட்ட செங்கோட்டை! வீட்டுக்குத் தீயிட்டு… கோயிலை இடித்து… என்னதான் நடக்கிறது?

maxresdefault 25 - 2025

நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகர் அமைதியாக இருந்தது ஒரு காலத்தில்.! இப்போது தென்காசி நகரை அடுத்து செங்கோட்டையும் அமைதி இழந்து தவிக்கிறது. அதற்குக் காரணம், யாரோ சில இஸ்லாமியர்கள்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேல் அமைதியாகவே நடந்து வருகிறது செங்கோட்டை நகரில். இந்த வருடம் அரசாங்கத்தின் உத்தரவுகள், நீதிமன்றத்தின் கெடுபிடி உத்தரவுகள், அதனால் காவல் துறையினர் கொடுத்த நெருக்கடி  இவ்வளவையும் மீறி, 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப் பட்டன.

வீரவிநாயகர் என்ற பிரதான விநாயகர் சிலையின் அழைப்பு நிகழ்ச்சி, விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளான புதன்கிழமை அன்று இரவு 8 மணி அளவில் துவங்கி நடைபெற்றது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான பாதையில் தான் விநாயகர் ஊர்வலமும் நடந்தது.

ஆனால், அண்மைக் காலமாக செங்கோட்டை நகரில் வித்யாசமான கோலங்களில் மசூதிகளுக்கு வந்து செல்லும் சிலரால் உள்ளூர் மக்கள் தூண்டப் பட்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர் அருகில் வசிப்போர்.

அண்மையில் வந்த ராமராஜ்ய ரத யாத்திரையின் போது, இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதன் மூலம் செங்கோட்டை நகர் வழியே வந்த ராமராஜ்ய ரத யாத்திரைக்கு பெரும் விளம்பரம் கிடைத்தது. அப்போதே, செங்கோட்டை நகரும் இரண்டு பட்டு நின்றது.

தொடர்ந்து, ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு தொடர்பாக செங்கோட்டை நகரில் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்குப் பின்னர், இஸ்லாமியர்கள் பொருமி வந்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா வரவே, முன்கூட்டியே இந்த முறை பிரச்னையைக் கிளப்பவும், விழாவை சீர்குலைக்கவும் இஸ்லாமியர்கள் திட்டமிட்டிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

முதல் நாள் ஊர்வலத்தின் போது, இஸ்லாமியர்களுடைய வீடுகளின் மொட்டை மாடிகளிலும் வராந்தாக்களிலும் செங்கற்களும் கற்களும் சேகரிக்கப் பட்டிருந்தன. வீடு கட்ட, மராமத்துப் பணிகளுக்காக என்று கூறப் பட்டாலும், அவற்றை எதற்காக அவர்கள் சேகரித்து வைத்தார்கள் என்பது, விநாயகர் ஊர்வலத்தின் போது வெளித் தெரிந்தது.

கண்மூடித் தனமாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில், ஊர்வலத்தில் வந்த பலரது மண்டைகள் உடைந்தன. விநாயகர் சிலை சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த இந்து இளைஞர்கள், தங்கள் பங்குக்கு கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பு மோதலாக அது வலுவடைந்தது.

இத்தகைய சூழ்நிலையை போலீஸார் எதிர்பார்க்கவில்லை. முன்கூட்டியே கணித்திருக்கவில்லை. போடப் படாத விநாயகர் சிலை கொட்டகைக்கு தீயணைப்புத் துறை சான்றிதழ் தேவைப்படுகிறது; ஆனால், நடக்கக் கூடிய ஊர்வலத்தின் பாதையில் கற்கள், மணல், ஆயுதங்கள் இருக்கின்றனவா, இருந்தால் ஏன் வைக்கப் பட்டிருக்கின்றன என்ற விசாரணையை காவல் துறை மேற்கொள்ள வேண்டிய நிலை காவல்துறைக்கு எழுந்திருக்கிறது!

இனி வருங்காலங்களில் எல்லா இடங்களிலும் இப்படி கற்கள் சேகரித்து வைக்கப் பட்டிருக்கின்றனவா என ஒரு முன்கூட்டியேயான சோதனைகள் மேற்கொள்ளப் படலாம். அதற்கு, செங்கோட்டை கலவரம் உதாரணமாகலாம்!


இந்நிலையில் சதுர்த்தி விழா முடிந்து, விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப் படும் இன்று, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரடியாகக் களத்தில் இறங்கியிருந்தார். மாவட்ட எஸ்பி., அருண் சக்தி குமார் உள்ளிட்டோரும் கடுமையாக முயன்றனர். ஆனாலும், இரு தரப்பினரும் மாறி மாறி புகார்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மீண்டும் ஊர்வலப் பாதையில் தகராறு செய்தனர் இஸ்லாமியர்கள். போலீஸார் வகுத்துக் கொடுத்த 25 வருட பாரம்பரியப் பாதையான அதில் செல்வதற்கும் முட்டுக்கட்டை போட்டனர் முஸ்லிம்கள். இத்தனைக்கும் மசூதியை ஒட்டிய சிறு சந்து, அதைக் கடந்து சுமார் 100 மீட்டருக்கும் அடுத்து தான் ஊர்வலப் பாதையான பெரிய தெரு உள்ளது. மசூதிக்கும் ஊர்வலப் பாதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போதும், மசூதியை ஒட்டிய பெரிய தெருவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிலர், தங்கள் தெரு வழியே ஊர்வலம் செல்லக் கூடாது என்று முரண்டு பிடித்தனர்.

இது மாவட்ட ஆட்சியரையே கூட அசைத்துப் பார்த்தது. அவர் உடனே, மற்றவர்களின் வழிபாட்டு உரிமையில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை, வழக்கமான ஊர்வலப் பாதையில்தான் விநாயகர் ஊர்வலம் செல்லும் என்று கூறி, இஸ்லாமியர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, இந்துக்களிடம் நீங்கள் பூஜையில் மட்டும் கவனம் செலுத்துங்கள், விநாயகருக்கான பூஜைகளை மட்டும் செய்யுங்கள், மற்றதை காவலர்கள் பார்த்துக் கொள்வார்கள், நீங்கள் எவரும் கல்லெறிந்து வன்முறையில் எதுவும் ஈடுபடக்கூடாது என்று கூறினார்.

சிறிது நேரத்தில், மீண்டும் அதே இடத்தில் இஸ்லாமியர்கள் கல்லெறிந்தனர். வீட்டின் மொட்டை மாடிகளில் நின்று கொண்டும், பூட்டிய வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டும் கற்களை எடுத்து ஊர்வலத்தினர் மீது எறிந்ததில், பலருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து, தடியடி நடத்த உத்தரவிடப் பட்டது. கல்லெறிந்தவர்களை அடையாளம் கண்டு போலீஸார் ஓட ஓட விரட்டினர்.

தொடர்ந்து அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, ஊர்வலம் தொடங்கியது. போலீஸார் பெருமளவில் ஊர்வலத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வந்தனர். செங்கோட்டை மேலூர் பகுதியை விட்டு, ஊர்வலத்தினர் புறப்பட்ட போது, வீடுகளைப் பூட்டிக் கொண்டு பெரும்பாலான மக்களும் ஊர்வலத்தின் பின்னே புறப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி ஹிந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் ஓட்டு வீட்டில், ஓட்டினை உடைத்து உள்ளே எரிந்துள்ளனர். ஊர்வலம் முடிந்து வந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. இதனால் கவலை அடைந்த பெண்கள், தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். அங்கே ஆட்சியரை முற்றுகையிட்டு, தங்களுக்கு இரவு பாதுகாப்புக்கு யார் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, இன்று காலை செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழாக் கமிட்டியினர் மற்றும் வர்த்தகர்கள், ஊர்ப் பொதுமக்கள் கூட்டம் போட்டு, அதில் சில தீர்மானங்கள் நிறைவேறின. அதில் இஸ்லாமியர்களின் கடைகளில் இனி பொருள்கள் வாங்க மாட்டோம், இஸ்லாமியர்களுடன் எந்த விதமான வர்த்தகமும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்பதும் ஒன்று..

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினைப் பார்க்க பலரும் கிளம்பியிருந்த நேரத்தில், அம்மன் கோயில் ஒன்றை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்களால் அங்கே பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள் கூட்டம், அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியபடியே இருந்தது. அவற்றை எல்லாம் ஆட்சியர் கேட்டுக் கொண்டிருந்தார். தங்கள் மீது தடியடி நடத்தினாலும் சரி, துப்பாக்கிச் சூடி நடத்தினாலும் சரி, வழக்கு போட்டாலும் சரி… வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களையும், கல்லெறிந்த இஸ்லாமியர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் பெண்கள். அந்த நேரத்தில், ஆட்சியர் முன்னிலையில் அருகே இருந்த இஸ்லாமியர்களின் வீட்டு மொட்டை மாடியில் இருந்து மீண்டும் கூட்டத்தினரிடையே கற்கள் வீசப் பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் அந்தப் பெண்களை கலைந்து போகச் சொன்ன ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இத்தகைய சூழ்நிலையில் செங்கோட்டை நகரில் இரவு நேரத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டனர். கடைகள் அடைக்கப் பட்டிருந்ததால், அவர்களுக்கான உணவு, குடிநீருக்கு பெரும் திண்டாட்டமாக இருந்தது.

12 COMMENTS

  1. வழக்கமாக அமைதியா நடந்து வரும் ஊர்வலத்தில் பிச்சனையை தூண்டி விட்டு இந்த ஊர்வலம் நடத்தவிடாமல் செய்யவே திட்டமிட்டே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்

  2. கடந்த விநாயகர் சதுர்த்தியின் மீது இந்துகளின் மீது பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டிய காவல்துறையின் முயற்சி பலிக்காததால் இந்த முறை கலவரத்தை உறுவக்கியிருக்கிறார்கள் என சந்தேகம்

  3. துருக்கிய விந்துக்கு பிறந்த முட்டாள் துலுக்கண்கள் மிக கடுமையாக உழைத்து பிரிந்து கிடக்கும் இந்துக்களை ஒற்றுமை படுத்துகிறார்கள்.

  4. உங்களை போன்ற ஆட்களின் எழுத்து தான் பயங்கரவாதம் ..நீங்களும் ஆர் எஸ் எஸ் கும்பல் என்பது புரிகிறது

  5. செய்திகள் உண்மையாகவும், அச்சுப்பிழைகள் இல்லாமலும் இருக்கிறது. தினசரி மின்னாளிதழுக்கு மக்கள் ஆதரவு பெருகவேண்டும். தேசிய வளர்ச்சியில் இந்த மின்னாளிதழில் பங்கு மிகச் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். நல்வாழ்த்துகள்…..அன்பன், மீ.விசுவநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories