5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு… நெறிமுறைகள்!

school - 2026

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு – நெறிமுறைகள் (முழு விவரம்):

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2019 ஆண்டு இறுதி பொதுத் தேர்வு நடைபெறும். 1,2,3 ஆம் பருவ பாடங்களிலிருந்து பொதுவான வினாக்கள் கேட்கப்படும். குறுவள மைய அளவில் மதிப்பீடு செய்யப்படும்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. இதற்கு நீண்டநாளாக எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.

5 மற்றும் 8-ம் வகுப்பின் மூன்றாவது பருவத் தேர்வையே பொதுத்தேர்வாக மாற்றி நடத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித் துறை. இதற்கான கேள்வித்தாளைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது அரசுத் தேர்வுத் துறை.

5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களின் கேள்வித்தாளில் வார்த்தை விளையாட்டுகள், கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துக போன்ற வகையில் மாணவர்களின் மொழிசார்ந்த அடிப்படை விஷயங்களைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகளும், கணிதப் பாடத்தில் பெருக்கல், வகுத்தல் சார்ந்த எளிய கணிதங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் புரிதல்திறன், எழுதும் திறனையும் சோதிக்கும் வகையில் கட்டுரை வடிவில் கேள்வித்தாளை அமைக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

இரண்டு வகுப்புகளுக்கும் கேள்வித்தாள் 50 மதிப்பெண் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண், பிறகு 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்பட்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடவுள்ளது பள்ளிக்கல்வித் துறை. தேர்வு மையங்களை அடையாளம் காணும் பணியைத் தொடங்கவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது பள்ளிக்கல்வித் துறை.

இந்தக் கடிதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மற்றும் 8 ம் வகுப்பில் எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள் என்ற விவரங்களைத் தொகுத்து வழங்கவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 20-க்கும் குறைவில்லாமல் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கான மையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு 3 கிலோமீட்டர் தூரத்துக்குள் போக்குவரத்து வசதிகள் எளிதாக இருக்கும் வகையில் தேர்வு மையங்களை அமைக்கும் வகையில் செயல்படவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால்
மாணவர்களின் சேர்க்கை குறையுமா அல்லது கல்வியின் தரம் கூடுமா என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

  • கவிஞர் சுவாதி (பள்ளி தலைமை ஆசிரியர்)
ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories