சிட்டா அடங்கல் இருந்தால் விவசாயிகளுக்கு மானியம்!

Published:

மதுரை நெற்பயிர் வெள்ளத்தில்

மதுரை: சிட்டா மற்றும் அடங்கல் இருந்தால், விவசாயிகளுக்கு கோடை உழவுக்கு
மானியம் வழங்கப்படும் என, வேளாண்துறை அறிவித்துள்ளது!

இது குறித்து உசிலம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி கூறியது..
உசிலம்பட்டி வட்டார விவசாயிகளுக்கு, வேளாண்துறையின் சார்பில் நீடித்த
நிலையான மானவாரி இயக்கத்தின் கீழ் கோடை உழவு செய்ய ஏக்கருக்கு
ரூ. 500 வீதம் மானியம் வழங்கப்படுகிறது.

கோடை உழவின் மூலம், மழைநீர் சேகரித்தல், கூட்டுப் புழுக்கள் மற்றும்
களைகளை அழித்தல், மண் அரிமானத்தை தடுத்தல் போன்ற பயன்
கிடைக்கிறது.

தொட்டப்பநாயக்கனூர், சிக்கம்பட்டி, கல்லூத்து, கீரிப்பட்டி, மேக்கிலார்பட்டி
தொகுப்புகளில் ஓரு தொகுப்புக்கு 100 ஹெக்டேர் வீதம் விவசாயிகளுக்கு
மானியம் வழங்கப்படும். ஆகவே, விவசாயிகள், சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் ஆவணங்களுடன் வேளாண் அலுவலர்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img