இந்தியாவை ஏற்காதவர்கள் இங்கிருந்து வெளியேறி விடலாமே!

உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kausalya bbc - 2026

அண்மையில் சாதி மறுப்புத் திருமணம் என்ற பெயரில், தம் ஆசைகளை பெற்றோர் மீது திணித்து, அதற்கு எதிராக இருந்ததால், பழி வாங்கியே தீருவேன் என நீதிமன்றப் படிகளில் ஏறியவர் கௌசல்யா என்ற பெண். இதனால் செய்திகளில் அதிகம் அடிபட்டவர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் சங்கர் தனது பெற்றோரால் கௌரவத்தைக் காக்க கொலை செய்யப் பட்ட பின்னர், மிகக் குறுகிய காலத்தில், சக்தி என்ற வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது இந்தத் திருமணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், மீண்டும் செய்திகளில் அடிபட்டார் கௌசல்யா. அவரை ஊடகங்கள் வீராங்கணையாக சித்திரித்து பேட்டிகள் எடுத்து வெளியிட்டன.

இந்நிலையில், பிபிசி தமிழ் அவரிடம் கருத்து கேட்டு வெளியிட்டுள்ளது. அதில், தாம் இந்தியர் என்ற உணர்வையும் இந்தியா என்ற நாட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர் சமூக ஊடகங்களில்! இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, இந்தியர் என்ற உணர்வுடனும், இந்தியா என்ற நாட்டின் இறையாண்மையிலும் நம்பிக்கை உள்ளவரே இந்தியர் என்று கருதப் படுவார். அவ்வாறு இல்லாத ஒருவர் எப்படி வெலிங்க்டன் ராணுவ முகாமில் பணியில் இருக்கிறார் என்று கேள்விகளை எழுப்புகின்றனர்.

” இந்தியாவை ஏற்றுக் கொள்ள முடியாத நீங்கள் ஏன் மத்திய அரசின் பணியை மற்றும் ஏற்றுக் கொண்டீர்கள்,உதவித் தொகையை எதற்காக பெற்றுக் கொண்டீர்கள். அடிமை மாநிலமெனக் கருதும் தமிழ்நாட்டில் நீங்கள் ஏன் வசிக்கிறீர்கள். இந்தியக் குடியுரிமையை தூக்கியெறியும் துணிச்சல் இருந்தால் பேசுங்கள்.உண்ட வீட்டிற்கும் துரோகம் செய்வது எங்கள் பண்பாடு அல்ல. இந்தியாவை புறக்கணிக்கும் நீங்கள். எங்கள் தாய் தேசத்தை விட்டு வெளியேறுங்கள். அப்போது ஏற்றுக் கொள்கிறோம். உங்கள் கருத்தை ???? “
– Rajam B Rajambalasubramanian 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.