மன்னர் காலத்தில் தனிநபருக்கு சொத்து ஏது?! பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பும் வரலாற்றாளர்கள்!

Published:

rajaraja cholan - 2026

மன்னர் காலத்தில் ஏது தனிநபர்களுக்கு நிலமும் சொத்துகளும் என்று பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்புகிறார்கள் வரலாற்றாளர்கள்.

இது குறித்து அவர்கள் முன்வைக்கும் வாதத் தகவல்கள்!

ராஜராஜசோழன் காலம் என்பதல்ல. ஷேர்ஷா காலம் வரை இந்தியாவில் தனி நபர்களுக்கு சொத்து இருந்ததில்லை. நாடு முழுதுமே அரசனின் சொத்து தான். அரசின் சொத்தல்ல. அரசனின் சொத்து. அவனாகப் பார்த்து மக்களுக்கு ஒதுக்கிக் கொடுப்பது தான். பட்டயம் எழுதிக் கொடுப்பது கூட பிற்காலத்தில் தான்.

ராஜராஜசோழன் காலத்தில் தனிப்பட்டோருக்கோ குடும்பங்களுக்கோ சொத்துரிமை என்பதே கிடையாது. அனுபவ பாத்யதை அல்லது குத்தகையில் விவசாயம் என்பது தான். அக்பரும் ஷேர்ஷாவும் தான் நிலங்களை பிரித்து வழங்க ஆரம்பித்தார்கள். அதுவும் கூட நீண்ட நாள் பாத்யதை போல. விவசாயம் பார்த்து வரி கட்டிக் கொள்வது. அந்த நிலைப்பாடு தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட கோயில்களுக்கு எழுதி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நிலங்கள்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

வரதராஜர் கோவிலுக்கு சொந்தமாயிருந்தது தான் காஞ்சி நகரமே. பிற்காலத்தில் வழிவழியாய் நிலத்தைப்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிலத்தை தானமாக வழங்கி பட்டயம்கொடுத்தார்கள். அது போல மற்றோரு உதாரணம் வாரணாசி. அயோத்தி. இந்த நாடு முழுதுமே அரசர்களின் சொத்து தான். கொடுப்பார்கள். பிடுங்கி அடுத்தவர்களிடம் கொடுப்பார்கள். இப்படித் தான் நடக்கும்.
tamilkingdom - 2026இந்தியாவில் எந்த சொத்தின் உரிமையை இன்று கொண்டாடுபவரும் அதற்கு அதிக பட்சம் 150 ஆண்டுகளுக்கு முன் தான் உரிமை பெற்றிருந்திருக்க முடியும். அதற்கும் முன்னாடி போய் பார்த்தால் எல்லா நிலமும் பல்லனோ, திருமலை நாயக்கரோ, சேரனோ, சோழனோ பிச்சை போட்டதாகத் தான் இருக்கும். 500 வருடங்களுக்கு முன் இந்த நிலத்தின் சொந்தக்காரன் இந்த நிலத்தை அப்போது ஆண்ட மன்னன் தான். ராஜராஜசோழன் காலத்தில் அவனுக்குக் கீழ் உள்ள நிலமனைத்தும் அவனுக்கே சொந்தம். அவனுக்கு சேவை செய்தோருக்கும் பொதுமக்களுக்கும் அவனாக பார்த்து தானம் கொடுத்த நிலங்கள் தான் அப்போது. தனிப்பட்ட சொத்து என்பது அப்போது எவனுக்கும் கிடையாது. ஆக, ராஜராஜசோழன் யாருடைய நிலத்தையும் பிடுங்க வேண்டியதில்லை.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இந்த தேசமே அவனுடையது தான். ரஞ்சித் வரலாற்றை படித்துவிட்டு பேசி இருக்கனும் வரலாறு தெறியாமல் அவசரப்பட்டு பேசிவிட்டார் இனி தமிழன் இராஜ ராஜ சோழனை பற்றி தவறாக பேசகூடாது அப்படி பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் வரலாற்றை படி வரலாற்றை படை வரலாறாக மாறு அதை விட்டு விட்டு தவறான செய்தியை பறப்பும் வேலையை ரஞ்சித் இன்றே நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Related articles

Recent articles

spot_img