February 24, 2026, 9:18 PM
27.3 C
Chennai

மோர், நீர் மோர் தெரியும்… கல்யாண மோர் தெரியுமா?!

Masala Chaas buttermilk - 2026

கல்யாண மோர் என்றால் என்ன ? குறிப்பாக தஞ்சாவூர் – கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகு நேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருந்து.

அன்று செம்மங்குடியோ, அரியக்குடியோ கச்சேரி இருக்கும். பக்கவாத்தியக்காரர்களும் பெரிய ஜாம்பவான்களாக இருப்பர். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். கச்சேரி கேட்பதற்கென்றே கூப்பிட்டவர்கள், கூப்பிடாதவர்கள் என்று பல கிராமங்களில் இருந்தும் மிகப் பெரிய கூட்டம் வரும்.

கச்சேரி முடிந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள். 500 பேருக்குச் சமைத்த சமையல் 1000 பேருக்கு எப்படிப் போதும்? சமையல் கலைஞர்களும் ஜாம்பவான்கள். ஒரு காளியாகுடி செட்டோ, அகோரம் செட்டோ ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் பெண் வீட்டாருக்குக் கவலை. எப்படி இவர்களையெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று? சமையல் கலைஞர் சொல்வார். “கவலையை எங்களிடம் விடும். உக்கிராண உள்ளில் இருக்கும் சாமான்கள் போதும்” என்று.

சரி. ஆனால் மோருக்கு வழி? ஒரு பெரிய அண்டா நிறைய அரிசி களைந்த நீரை (அது மோர் நிறத்தில்தான் இருக்கும்) கொட்டி, அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து, கடுகு தாளித்துப் பரிமாறுவார்கள். எல்லோரும் ருசித்து தொன்னையிலும் வாங்கிக் குடிப்பார்கள். “மோரு பலே ஜோரு” என்று சொல்லி, தாம்பூலம் வாங்கிக் கொண்டு விடை பெறுவார்கள். எப்போதுமே இமிடேஷன் ஒரிஜினலைவிட ஜொலிக்கும்தான். அதற்குக் கல்யாண மோரும் விதிவிலக்கில்லை.

  • திருகோடிகாவல் வைத்யநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories