எளிதாக மொமொஸ் செய்வது எப்படி?

Published:

momos 1 - 2026

வெஜிடேரியன் மொமொஸ்

தேவையான பொருட்கள்:
மொமொவிற்கு.

மைதா – 3 கப்

பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்

வெங்காயம் – 4-5 (பொடியாக நறுக்கியது)

முட்டைகோஸ் – பாதி (பொடியாக நறுக்கியது)

கேரட் – 4 (பொடியாக நறுக்கியது)

வெண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

அஜினமோட்டோ – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சாஸ் செய்வற்கு.

தக்காளி – 3 பூண்டு பற்கள் – 2

பச்சை மிளகாய் – 2

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும்,

வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கியதும், இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கி,

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

பின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு மென்மையாக வெந்து, தண்ணீர் வற்றியதும், அதில் அஜின மோட்டோவைப் போட்டுநன்கு கிளறி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய வட்டமாக தட்டி,

அதன் நடுவே காய்கறி கலவையை சிறிது வைத்து,கூம்பு வடிவில் செய்து கொள்ள வேண்டும்.

இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, தண்ணீர் நன்கு கொதித்தப் பின்னர்,

இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, அதில் செய்து வைத்துள்ள மொமொக்களை வைத்து,

மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

சாஸ் செய்முறை.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் தக்காளியைப் போட்டு, அடுப்பில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

பின் தக்காளியில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும்.

பின்பு மிக்ஸியில் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு தட்டில் இட்லி பாத்திரத்தில் உள்ள மொமொக்களை வைத்து, அதன் மேல் சாஸை ஊற்றி பரிமாறலாம்.

சுவையான மொமொஸ் தயார்.

Related articles

Recent articles

spot_img