டேஸ்டா, ஆரோக்கியமா மல்டி கீரை வடை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kirai vadai 1
kirai vadai 1

மல்டி கீரை வடை

தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம்,
உளுத்தம்பருப்பு – 50 கிராம்,
தூதுவளைக்கீரை, கறிவேப்பிலை,
வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – மூன்று,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – 250 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தூதுவளை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை, ஆகியவற்றை ஆய்ந்து, அலசி, சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். பருப்புகளை ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
இந்த மாவுடன் கீரைகள், உப்பு, நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.