விடாம கேப்பாங்க கடாய் பன்னீர்! செய்து அசத்துவோம்!

Published:

kadai panneer

கடாய் பன்னீர்

தேவையான பொருட்கள்
எண்ணெய் -2 தேக்கரண்டி
நெய் -1 தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
தனியா -1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -3
பட்டை -2
லவங்கம் -2
ஏலக்காய் -2
சின்ன வெங்காயம் -3
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
தக்காளி -2
சக்கரை -2 சிட்டிக்கை
மஞ்சள்தூள் – சிறிதளவு
பன்னீர் -1 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் -2
பச்சை மிளகாய் -2
அரைத்த தக்காளி விழுது -2
உப்பு -தேவையான அளவு
கடாய் மசாலா அரைக்க
தனியா -2 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
மிளகாய் உரித்தெடுத்து(விதைகள்) -2 தேக்கரண்டி

செய்முறை

தனியா, சீரகம், மிளகாய் உரித்தெடுத்து மூன்றையும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெய் விட்டு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, சக்கரை, உப்பு, மஞ்சள் தூள், பன்னீர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி விழுது ஆகியவற்றை கிளறி நன்றாக வதக்கவும்.
பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
பத்து நிமிடம் பிறகு இப்பொழுது அரைத்து வைத்துள்ள கடாய் மசாலாவை இதனுடன் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
அசத்தலான கடாய் பன்னிர் ரெடி.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img