18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட பதிவு செய்வது எப்படி?

நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
covaxin-1
covaxin-1

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்வது எப்படி?

  1. https://cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
  2. பதிவுசெய்ய ‘register/sign in yourself’என்பதை க்ளிக் செய்யவும்.
  3. உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
  4. உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும்.
  5. உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி (Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதை வைத்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்..

பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை, பான் காடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எ.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.