கனவின் விளைவு: கிணறு தரும் குறியீடு!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream
dream

கிணற்றை கனவில் நீங்கள் கிணற்றில் கண்டால் திருமணம் கைகூடும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

நீங்கள் கிணற்றில் தண்ணீரை எடுப்பது போல கனவு கண்டால், நினைக்கும் காரியங்கள் கைகூடி வரும்.

கிணற்றில் இறங்கி நீந்துவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று முன்னேறி செல்வீர்கள் என்று பொருள்.

கிணற்றில் உங்கள் தலையை யாரோ அழுத்துவது போல கனவு கண்டால்
பொதுவாக நல்லதல்ல, கவனமாக கொஞ்சம் இருப்பது நல்லது.

நீரில்லாத வெறும் கிணற்றை கனவில் கண்டால் செல்வம் வளம் குறையும்.

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்
பொழுது கிணற்றிலிருந்து தண்ணீர்
வெளியேறி கொண்டிருந்தால்
குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறக்க
நேரிடலாம். இல்லையென்றால் அதற்கு
இணையான கஷ்டங்கள் ஏற்படும்.

well
well

நீங்கள் ஒரு கிணற்றை தோண்டுவது போல கனவு கண்டால் உங்களுக்கு செய்யும் காரியங்களில் வெற்றி உண்டு.

மற்றவருக்கு நீங்கள் கிணறு தோண்டி கொடுப்பது போல் கனவு கண்டால் உங்கள் திறமையின் மூலமாக அவர் அதிகம் சம்பாதிப்பார்.

கிணற்றில் தண்ணீர் பொங்கி வருவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும்

குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகள் தவறலாம்

குழந்தையை கிணற்றில் போடுவது போலவும் பின்பு தூக்குவது போலவும் கனவு கண்டால் உங்கள் மனது அலை பாய்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம் செய்யும் செயல்களில் நிதானமாக கொஞ்சம் பொறுமையாக செயல்படுவது நல்லது

கிணற்றில் குதிப்பது போல் கனவு கண்டால் உங்கள் துன்பங்கள் விலகும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.