அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

Published:

health tips 1
health tips 1

கண் இரைப்பைகளில் கட்டியா?

வெண் சங்கை முலைப்பாலில் உரைத்து கட்டியின் மேல் பற்றுப் போட
வெண் சங்கை முலைப்பாலில் உரைத்து கட்டியின் மேல் பற்றுப்போட சீக்கிரத்தில் குணமாகும்.

கருந்தேமலுக்கு

மருதாணி இலையுடன் சிறு துண்டு உடம்புக்குப் போடும் சோப்பு சேர்த்து நன்றாக அரைத்து அதைக் கருந்தேமலின் மேல் பற்றுப் போட்டுவர சில நாள்களில் கறுப்பு நிறம் மறைந்து சாதாரண நிறம் வந்துவிடும்.

காக்காய் வலிப்புக்கு

வேப்பிலை, வில்வ இவை, துளசி இலை சமபங்கு எடுத்து அத்துடன் ஒரு கடுக்காயையும் நசுக்கிப் போட்டுக் கஷாயம் வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் 50 மி.லி. சாப்பிட்டு வர வேண்டும், தொடர்ந்து நாற்பது நாள்கள் இதைக் குடித்து வர வேண்டும். இத்தினங்களில் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது.

எலுமிச்சம் பழச்சாற்றை வெந்நீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர நாளடைவில் காக்காய் வவிப்பு நோய் குணமாகும்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

காய்ச்சல் குணமாக…

அரை ஸ்பூன் மிளகு. கால் ஸ்பூன் சீரகம், ஒரு பிடி வேப்பங்கொழுந்து ஒரு சிறிய துண்டு மஞ்சள் இவற்றைத் தட்டிப்போட்டுக் கஷாயம் வைத்து மூன்று வேளை சாப்பிட காய்ச்சல் குணமாகும்,

சீரகம் அரைத்தேக்கரண்டி, மிளகு அரைத்தேக்கரண்டி இஞ்சித் துண்டு ஒன்று, கைப்பிடியளவு கறிவேப்பிலை சேர்த்து மை போல் அரைத்து எடுத்து வாயில் போட்டுத் தண்ணீர் குடிக்கவும் காலை, மாலை இவ்விதம் சாப்பிட்டு வர எல்லா காய்ச்சலும் குணமாகும்.

வேப்பம் ஈர்க்கை கஷாயம் வைத்து சாப்பிட நாள்பட்ட சுரமும் சரியாகும். பித்த சாந்தியையும் இரத்த சுத்தியையும் ஏற்படுத்தும்,

காலரா குணமாக…

வீரம் 25 கி. படிகாரம் 50 கிராம் வாங்கி வந்து படிகாரத்தை பொடி செய்து பாதியை ஒரு மண் குடுவையிலிட்டு வீரத்தை அதன் மேல் கட்டியாக வைத்து மீதி படிகாரத் தூளைப் போட்டு அழுத்தி மூடாது சிறு நெருப்பிவிட்டு படிகாரம் முட்டைப்போல் பொரியும் வரை வைத்து எடுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு ஒரு குன்றிமணி எடையளவு தேனில் குழைத்துக் கொடுக்கவும், ஒரே வேளை மகுந்தில் குணமாகிவிடும்,

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

வசம்பு 10 கிராம், இடித்து கொதிக்கின்ற நீர் 100 மி.லி. சேர்த்து ஊற வைத்து எடுத்து வடிகட்டி, காலரா தொற்று நோய் பரவியுள்ள காலங்களில் குடிக்க, காலரா வராமல் தடுக்கலாம். காலரா நோய் கண்டவர்கள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை இந்நீரைப் பருக, பேதி நின்று சுகமாகும்.

ஜாதிக்காயை நசுக்கி இரண்டு குவளை நீர் விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக்கி வாந்தி பேதி கண்டவர்களுக்கு 15 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு வாய் கொடுத்து வர காலரா குனமாகும்.

கொய்யா இலையைக் குறுக அரிந்து ஒரு சட்டியில் போட்டு இரண்டொரு மிளகையும் தட்டிப்போட்டு வதக்கி 2 டம்ளர் நீர் ஊற்றி பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அரைமணி நேரத்துக்கு ஒரு தரம் ஒரு வாய் அளவு குடித்து வர காலரா, வறட்சி தாகம் எல்லாம் அடங்கும்,

Related articles

Recent articles

spot_img