அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பொடுகு, இளநரை, செம்பட்டை, மேகநோய், மேகப்புண்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

பொடுகு நீங்க…

பீட்ரூட் கிழங்கை இடித்து நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இறக்கி சம அளவு காடி நீரையும் கலந்து பொடுகு, நீர் வடியும் புண்கள் ஆகியவற்றின் மீது தடவி வர குணமாகும்.

செம்பட்டை முடி கறுப்பாக…

நீல ஆவாரை, மருக்கொழுந்து இலைகளை சம அளவு எடுத்து மசிய அரைத்து தலை முடியில் பூசி ஊற வைத்து குளித்து வர முடி கருக்கும்.

செம்பருத்தி பூவை சருகுபோல் காயவைத்து தூளாக்கி சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரம் வரை வெயிலில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வர முடி உதிராது. கறுப்பாக வளரும்.

இளநரை முடி கருக்க…

கரிசலாங்கண்ணி 350 கிராம். கொட்டைக்கரந்தை இலை 350 கிராம் எடுத்து உவர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் அளவு தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இளநரை மாறும்.

மேக நோய் (சிஃபிலிஸ்) சரியாக…

முருங்கை பிசின் ஒரு தோலா எடுத்து அரை லிட்டர் நீரில் எட்டு மணி நேரம் ஊற வைத்து அதிகாலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட நோய் குணமாகும்.

மேகப் புண் ஆற…

மஞ்சளையும் பொடுதலை இலையையும் கலுவத்தில் இட்டு மைய அரைத்து புண்ணின் மேல் தடவி பற்றுப் போட புண் ஆறிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.