health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பாம்புக்கடி, மார்புவலி, தோல் உரிதல், இரத்தம் நிற்க, மூக்கில் நீர் நிற்க..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

பாம்பு கடிக்கு…

தாமரைப் பூவின் அண்டாசயப் பகுதியையும் மிளகையும் சேர்த் தரைத்து பாம்புக்கடி விஷங்களுக்குக் கொடுத்தால் நல்ல குணம் ஏற்படுகிறது.

இஞ்சி வைத்தியம்

இஞ்சியையும் வெல்லத்தையும் சமஅளவு சேர்த்து சாப்பிட உள்ளங்கை, உள்ளங்காலில் தோல் உரிவது நிற்கும்.

10 கி இஞ்சி, 20 கி வெள்ளைப் பூண்டு இரண்டையும் நீர் விட்டரைத்து
200மி.லி. வெந்நீரில் கரைத்து காலையில் ஒரு பங்கும் மதியம் ஒரு பங்குமாக சாப்பிட இரண்டே நாள்களில் வாயுவினால் ஏற்படும் மார்வலி குணமாகும்.

அரைகிலோ இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பிலேற்றி சுண்டியதும் அதே அளவு தேன் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொண்டு காலையும் மாலையும் உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர 40 நாள்களில் தொந்தி கரையும்.

இரத்தம் நிற்கவில்லையா?

கஸ்தூரி மஞ்சளை சுட்டு கரியாக்கிய தூளை, மாசிக்காயை கட்டு சாம்பலாக்கி அதனுடன் கலந்து வெட்டுகாயத்தின் மீது அழுத்த அப்படியே பிடித்துக் கொள்ளும் இரத்தம் நின்று விடும்.

மூக்கில் நீர் வடிகிறதா?

பசு நெய்யில் ஏலத்தை பொடித்துப் போட்டுக் காய்ச்சி ஆறிய பிறகு சில துளிகள் மூக்கில் விட நீர் வழிவது நிற்கும்.

வசியத்துக்கு…

நாகமஞ்சள் வசியத்துக்கு மிகவும் விசேஷமாகும். இம்மஞ்சளை வாயிவிட்டு, மனத்திடத்துடன் உலவி வர காணாமல் போன பொருள்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியும். நாகமஞ்சளின் அபூர்வ குணம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.