Man Vs Wild வியக்க வைத்த மோடி..! கலக்கும் காட்டுப் பயணம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modiVsWild - 2026

மேன் வெர்சஸ் வைல்ட் என்ற ஷோவில் தென்பட்டு வியக்க வைத்துள்ளார் மோடி. முன்னெப்போதும் பார்த்திராத மோடியை பார்க்க வேண்டுமென்றால் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும்.

உத்தரகாண்ட்:- பிரதமர் நரேந்திர மோடி முன்னெப்போதும் காணப்படாத விதத்தில் ஒரு அட்வென்சர் ஷோவில் தென்படப் போகிறார். மேன் வெர்சஸ் வைல்ட் என்ற டிவி ஷோ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிஸ்கவரி சேனல் பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

காடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள மிருகங்கள் மற்றும் ஊர்வனவற்றின் வாழ்க்கை முறையை நேரில் பார்த்து விவரிக்கும் இந்த ஷோவில் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்துள்ளார். இந்த ஷோவின் ஹோஸ்ட் பிரிட்டிஷ் சாகச வீரர் “பேர் க்ரில்ஸ்”.

அவருடன் சேர்ந்து பிரதமர் மோடி பயணிக்கும் வீடியோவுக்கு தொடர்பான ப்ரமோவை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 12 அன்று இரவு 9 மணிக்கு இந்த ஷோ ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவில் நதியில் பிரதமர் மோடியின் பயணம், காட்டில் விலங்கு களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மலைவாசிகள் பயன்படுத்தும் ஆயுதத்தை கையில் பிடித்திருப்பது போன்றவை காணப்படுவதால் இந்த ஷோ மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

உத்தராகண்ட் வனப்பகுதிகளில் உள்ள ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கில் இந்த வீடியோ ஷூட் செய்ததாக பேர் க்ரில்ஸ் டுவிட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.