அப்பாச்சி தீர்வு: வயிற்றுப்புண், தொண்டை அழற்சி, மலச்சிக்கல், படை, பசிக்கு..!

Published:

health tips - 2026

வயிற்றில் புண்ணா?

வாய்ப்புண், வயிற்றுப்புண்ணிற்கு திராட்சை ரசம் மிகவும் நல்லது. தினமும் பகல் சாப்பாட்டுக்குப் பிறகு அரை டம்ளர் கறுப்பு திராட்சை சாறு, மூன்று நாள்கள் சாப்பிட்டாலே வயிற்றுப் புண், வாய்ப்புண் இரண்டுமே ஆறிவிடும்.

சளியினால் தொண்டை அழற்சியா?

ஒரு டம்ளர் சூடான பாலில் 1 கரண்டி கிளிசரின் ஊற்றி சாப்பிடலாம். சூடான வெந்நீரில் சாப்பிடலாம். தொண்டையில் சிறிது நேரம் தேக்கி வைத் திருந்து குடிப்பது நலம். கிளிசரின் தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.

மாங்காயில் மருத்துவம்

பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்தும் கல்லீரலுக்கு வலிமை தரும். அதனால் மாங்காயை ஊறுகாய், பச்சடி என்று ஏதேனும் ஒரு வகையில் சாப்பிட்டு பவன் பெறலாம்.

பசி எடுக்க…

இஞ்சி, மிளகு, சீரகம், இலவங்கம், சுக்கு, திப்பிலி, சதகுப்பை ஆகிய வற்றை சம அளவு எடுத்து அரைத்து சிறு உருண்டை மாத்திரைகளாக உருட்டி வெயிலில் காயவைத்து வைத்துக் கொண்டு மந்தமாக உள்ள நேரத்தில் ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடிக்க நல்ல பசி எடுக்கும்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

பூவன் பழ மருத்துவம்

உடலில் படை உள்ளவர்கள் நன்கு கனிந்த பழத்தை படை உள்ள இடத்தில் நன்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து சீயக்காய் போட்டுக் கழுவி வர சில நாட்களில் படை மறையும், உள்ளுக்கு தினமும் இரவில் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

Related articles

Recent articles

spot_img