health tips - 2026

அப்பாச்சி தீர்வு: விக்கல், கண்பார்வை, வரட்டு இருமல், பற்களில் கறை, முதுகுவலி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

விக்கல் சரியாக…

திப்பிலி. சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு கரண்டி தேனில் இரண்டு சிட்டிகைத் தூள் கலந்து குழைத்து சாப்பிட விக்கல் நிற்கும்.

கண் பார்வை தெளிவு பெற…

வைட்டமின் ‘ஏ’ அதிகமுள்ள முருங்கைக் கீரை, கேரட், முளை கட்டிய பயறு வகைகள். கரிசலாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரை, கொத்துமல்லிக் கீரை இவற்றை உணவில் அதிக அளவு சேர்த்து வர வேண்டும். சிரசாசனம். பிராணாயாமம் போன்ற பயிற்சி கண்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து கண்ணொளியை புதுப்பிக்கிறது.

கொத்துமல்லிக் கீரையை பச்சையாக மென்று தின்று வர கண்பார்வை கூடும். கொத்துமல்லிக் கீரையை நன்கு மைய அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் காலை, மாலை ஒன்பது நாள்கள் பருகி வர மாலைக்கண் நோய் குணமாகும்.

அமுக்கராக்கிழங்கையும் அதிமதுரத்தையும் சம அளவு எடுத்து நன்கு உவர்த்தி இடித்து துணியில் சலித்து வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை நெல்லிக்காய் சாற்றில் சேர்த்து குடித்து வர மூக்குக் கண்ணாடி போட வேண்டிய அவசியமே வராது.

பாதாம் பருப்பு 30 கிராம், சோம்பு 10 கிராம், பேரீச்சம்பழம் 50 கிராம். அத்திப்பழம் 20 கிராம் இவற்றை அரைத்துப் பாலில் கலந்து 40 நாள்கள் இரவில் சாப்பிட்டு வர கண் கோளாறுகள் அனைத்தும் விடுதலை பெற்று பார்வை சக்தி பெருகும்.

பற்களின் கறை நீங்க…

மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் உப்பு கலந்து பல் துலக்க கறை நீங்கும். எலுமிச்சம்பழச் சாற்றுடன் உப்பு கலந்து பல் துலக்க இதே பவன் நிச்சயம்.

முதுகு வலி நீங்க…

வாயு சம்பந்தமான முதுகுவலியாக இருப்பின் முருங்கைக் கீரைச் காற்றுடன் உப்பு கலந்து பருக குணமாகும்.

வரட்டு இருமலுக்கு…

சிறிது சித்தரத்தையை வாயில் அடக்கிக் கொண்டால் நெஞ்சு கமறலுடன் ஏற்படும் இருமல் குணமாகும்.

கடுக்காய் ஒன்றைத் தணலில் இட்டுச் சுட்டு அதன் தோலின் ஒரு துண்டை வாயில் ஒதுக்கிக் கொண்டாலும் இருமல் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.