அப்பாச்சி தீர்வு: விக்கல், வீக்கம், பெரும்பாடு, வெடிப்பு, வாயுத்தொல்லை..!

Published:

health tips - 2026

விக்கல் குணமாக…

நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நீண்டகால விக்கல் நோய் குணமாகும்.

பெரும்பாடு சரியாக…

சாதிக்காய், கற்பூரம், ஏலம், லவங்கம், வெண்கொடி வேலி வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி நன்றாக தூள் செய்து துணியில் சலித்து வைத்துக் கொண்டு காலை. மாலை ஒரு சிட்டிகையளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கு நீண்ட நாள்களுக்கு அதிக அளவில் ஏற்படும் இரத்தப் போக்கு (பெரும்பாடு) குணமாகும்.

வீக்கத்திற்கு…

கண்டங்கத்திரி விதையை நீர் விட்டரைத்து பற்றுப் போட சாதாரண மாக ஏற்படும் கை கால் வீக்கம் வடிந்து குணமாகும்.

வெடிப்பு குணமாக…

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறெடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி வைத்துக் கொண்டு வெடிப்புகள் மீது தடவி வர குணமாகும்.

வாய்வுத் தொல்லை நீங்க…

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

முருங்கைப்பட்டையை இடித்து தண்ணீர் விட்டுக் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக சுண்டியவுடன் அதனுடன் சம அளவு விளக்கெண் ணெய் சேர்த்து நீர் சுண்டக்காய்ச்சி ஒரு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் பாலில் கலந்து காலையில் மட்டும் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர வாய்வுத் தொல்லையில் ஏற்படும் இடுப்பு வலி, மார்பு வலி முதலியன நீங்கும்.

Related articles

Recent articles

spot_img