ஈரான் நாட்டின் ‘ஜிம்’மில்.. உடற்பயிற்சிக்கான ‘வார்ம்அப்’ பாட்ட கேளுங்க.. அட நம்ம போக்கிரிப் பய பாட்டுல்ல..!

Published:

tamilsonginiran - 2026

ஈரான் நாட்டில் ஜிம் ஒன்றில் காலை நேர உடற்பயிற்சிக்கான வார்ம் அப் செய்யும் போது, தமிழ் பாடல் ஒன்றுக்கு சிலர் கையைக் காலை தூக்கி, வார்ம் அப் நடனம் ஆடும் வீடியோ காட்சி வெளியாகி டிவிட்டரில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஈரான் நாட்டின் ஜிம் ஒன்றில் மாம்பழமாம்… போக்கிரி பட பாட்டுதான் காலை நேர உடற்பயிற்சிக்கான வார்ம் அப் பாடல்.

இந்திய தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா, தனது டுவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான வீடியோக்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இன்று காலை, ஈரான் நாட்டில் உள்ள ஜிம் ஒன்றில் பிரபல தமிழ் பாட்டுக்கு நடனம் ஆடிய படி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அண்மையில் நடிகர் விஜய் நடித்து வெளியான படம் போக்கிரி. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி… என விஜய், நாயகி அசினுடன் ஆடும் டூயட் பாடலை உற்சாகமாகப் போட்டு நடனமாடி, உடற்பயிற்சிகளைச் செய்ய தொடங்குகின்றனர்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

ஈரானின் இசை கலாசாரமும் இது போன்ற துள்ளல் இசைப் பாடல்களை ஒட்டியே வரும் என்கின்றனர் இந்த டிவிட்டர் பதிவு பதில்களில்.! பாடலின் பொருள் மிகவும் ஆபாசமாக இருக்கும், ஆனால் பாடலின் நடனம் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர் சிலர்.

விஜய் அண்ணா பாட்டு… என்று புளகாங்கிதம் அடைகின்றனர் விஜய் ரசிகர்கள்.

அந்த ஜிம்மில், இந்தப் பாடலை ஓடவிட்டு இசைக்கு ஏற்றபடி நடன அசைவுகளை ஜிம்மின் பயிற்சியாளர் சொல்லிக் கொடுக்கிறார்.

இந்த வீடியோவை அனுஷேகல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி் வருகிறது. டிவிட்டர் வாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆனந்த் மகேந்திரா, ‘இது நிஜம்தானா? எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனி நானும் படுக்கையில் இருந்து எழுந்து, தமிழ் பாடல்களை ஒலிக்கச் செய்து புதிய நாளை சந்திக்கப் போகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img