அடைக்கலமாய் வந்த பெண்! தர தர என கீழே தள்ளி… இவர் நடந்து கொண்ட தரங்கெட்ட செயல்! துடிக்க வைக்கும் வீடியோ!

இந்தியா கிரைம் நியூஸ் புகார் பெட்டி

pazhankudi woman - 2026சத்தீஸ்கர் மாநிலத்தில் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை ,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண் ஒருவர் தனது 3 மாத குழந்தையுடன் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் வெள்ளத்திலிருந்து குழந்தையுடன் வெளியேறிய அந்த பெண் கொரியா மாவட்டத்தில் பர்வானி கன்யா ஆஷ்ரம் என்ற பள்ளி விடுதியில் தங்கினார். இதையறிந்த பள்ளித் தாளாளர் சுமீலா சிங்கின் கணவர் ரங்லால் சிங், விடுதி துப்புரவு பணியாளர் ஒருவருடன் சென்று விடுதியை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்.pa w - 2026ஆனால் அந்த பெண்ணோ வெளியேற மறுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரங்லால், அந்த பெண் படுத்துள்ள கட்டிலில் இருந்த துணியுடன் அவரை சேர்த்து இழுக்கிறார்.

p w - 2026இதில் எடறி விழும் அந்த பெண்ணை ரங்கலால் அந்த பெண்ணின் கையை பிடித்து தரதரவென இழுக்கிறார். அந்த பெண்ணின் ஆடைகள் நெகிழும் நிலையிலும் விடாமல் வெறிக் கொண்ட ரங்கலால் தரையோடு தரையாக இழுத்து கொண்டு வந்து வெளியே தள்ளி விடுகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் பழங்குடியின நலத் துறையும் ஆளும் காங்கிரஸ் ஆட்சியும் நேரில் சென்று விசாரணை நடத்தியது. ரங்கலால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை அறிவித்தது.

&n

bsp;

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.