சிதம்பரத்தின் செயலுக்கு காங்கிரஸ் துணை : ப்ரியங்கா காந்தி !

இந்தியா சற்றுமுன்

pc p 1 - 2026முன் ஜாமீன் மறுப்பு! ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ.,!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது  இதனை அடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்  தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ப.சிதம்பரம் தற்போது எங்கே இருக்கின்றார் என்று தெரியாத நிலையில் இன்று அவருடைய முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டால் ப.சிதம்பரம் கைதை தவிர்க்க முடியாது.

சிபிஐ., இங்கே..! சிதம்பரம் எங்கே..!

ப.சிதம்பரம் அவர்களை கைது செய்ய எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட பல காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் தான் சிதம்பரம் வேட்டையாடபடுவதாகவும், எந்த சூழலிலும் காங்கிரஸ் அவருக்கு துணை நிற்கும் என்றும் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த பொருளாதார மேதையும் நிதியமைச்சராகவும் இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட ஒருவரை வேட்டையாடுவது வருத்தத்திற்கு உரியது என்றும், உண்மை எப்போதும் வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவையின் மிகவும் தகுதிவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய உறுப்பினர், @PChidambaram_IN ji நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் உட்பட பல பதவிகளை வகித்து விசுவாசத்துடன் நமது தேசத்திற்கு சேவை செய்துள்ளார். அவர் அதிகாரமின்றி உண்மையை பேசுகிறார், இந்த அரசாங்கத்தின் தோல்விகளை அம்பலப்படுத்துகிறார், .ஆனால் உண்மை கோழைகளுக்கு சிரமமாக இருக்கிறது, எனவே அவர் வெட்கத்துடன் வேட்டையாடப்படுகிறார். நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம், அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சத்தியத்திற்காக தொடர்ந்து போராடுவோம்.என கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.