ப.சிதம்பரம் மீது ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு வழக்கு! நேரில் ஆஜராக உத்தரவு!

Chidambaram - 2026

ப.சிதம்பரத்துக்கு அடுத்த அடி! ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு தனியார் நிறுவனம் வழக்கு! நேரில் ஆஜராக மும்பை ஐகோர்ட் உத்தரவு!!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு எதிராக ரூ.10 ஆயிரம்கோடி இழப்பீடு கேட்டு, 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தில் 63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் ப.சிதம்பரம், திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கே.பி.கிருஷ்ணன், பார்வோர்டு மார்கெட் கமிஷன் தலைவர் ரமேஷ் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிட்டப்பட்டிருப்பதாவது:- காங்கிரஸ் ஆட்சியி்ல் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது, எங்கள் நிறுவனத்தை குறிவைத்து, ப.சிதம்பரம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஏராளமான தொல்லைகளைக் கொடுத்தார். எங்கள் நிறுவனத்தின் மீது பல்வேறு அரசு அமைப்புகள் விசாரணையும், சோதனையும் நடத்தியதில் எந்தவிதமான பணமுறைகேடும், மோசடியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

எங்கள் நிறுவனத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் ப.சிதம்பரம், சதித்திட்டம் தீட்டி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் எங்கள் நிறுவனத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக 10 ஆயிரம் கோடி ரூபாயை ப.சிதம்பரம் வழங்க வேண்டும். – இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி ப.சிதம்பரம், இரு அதிகாரிகளான கே.பி. கிருஷ்ணன், ரமேஷ் அபிஷேக் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவி்ட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories